சனி, 28 பிப்ரவரி, 2015

தாய் சேய் நலத்திட்டத்தில் மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தல்




தாய், சேய் நலத்திட்டத்தில் மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் எம்.எஸ். சண்முகம்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
மருத்துவர்கள் நோயாளிகளிடம் பனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு தகவல் பதாகைகளை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக, அவர் மன்னார்குடி ஒன்றியம் புனவாசல், சாத்தனூர், உள்ளிக்கோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளின் பதிவேடு, தடுப்பூசி பதிவேடு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான நிரந்தர பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மருத்துவக் கல்லூரி மருத்துவர் மீனாட்சிசுந்தரம், இணை இயக்குநர் செங்குட்டுவன், துணை இயக்குநர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka