திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம்
சாலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குச் சொந்மான குப்பை
கிடங்கு உள்ளது. இதில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைப்பதால்,
சுற்றுப்புறங்களில் புகையினால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு
ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரொக்கக்குத்தகை பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.
செல்லபாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2008, நவம்பர் 15-ல் வழக்குரைஞர் காசிநாதபாரதி மூலம்
பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஜன. 28-ம் தேதி
விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிசான்
கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய அமர்வு, வருகிற மார்ச் 4-ம் தேதிக்குள் திருத்துறைப்பூண்டி
நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக