புதன், 4 பிப்ரவரி, 2015

3,339 மகளிருக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி

திருவாரூர் மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டம் மூலம் 3,339 மகளிருக்கு

தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா.

திருவாரூர் அருகே காட்டூரில் அண்மையில் நடைபெற்ற கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான தற்காப்பு கலை பயிற்சியைத் தொடக்கிவைத்து, மேலும் அவர் பேசியது:

வறுமை ஒழிப்புத் திட்டங்களில் முன்னோடித் திட்டமான புதுவாழ்வுத் திட்டத்தில் செயல்படும் அனைத்து கிராம வறுமை ஒழிப்பு மற்றும் ஊராட்சி அளவிலான சுயஉதவிக்குழு கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு செய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் செயல்படும் 159 கிராம வறுமை ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு கூட்டமைப்பு உறுப்பினர்கள் 3,339 மகளிருக்கு இப்பயிற்சி படிப்படியாக அளிக்கப்படும். ஊராட்சி அளவில் நடைபெறவுள்ள பயிற்சியில் ஒரு குழுவுக்கு 30 பேர் கொண்டு 12 மணி நேரம் மாவட்ட முகமை மூலம் பயிற்சியளிக்கப்படும். இதில் மகளிர் எளிய முறையில் உடற்பயிற்சி, கராத்தே மற்றும் ஜூடோ நுணுக்கங்கள், பலவீனங்களை பலமாக மாற்றும் ஆற்றல், கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறன், துணிச்சல், அபாய சூழலில் கை, கால் மற்றும் கிடைக்கும் ஆயுதம் மூலம் தற்காத்துக் கொள்ளுதல் ஆகிய பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, குழு உறுப்பினர்கள் பயிற்சிப் பெற்று பயன்பெறலாம் என்றார் லேகா.

நிகழ்ச்சியில் புதுவாழ்வு மாவட்ட திட்ட மேலாளர் சு. கலைவாணி, உதவி திட்ட மேலாளர்கள் சு. அருள், ஆ. கலைமணி, பி. சரவணன், ஹரிதாஸ் (திறன் வளர்ப்பு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka