ஞாயிறு, 28 ஜூன், 2015

ராங் கால் வந்தால் மாணவிகள் பேசக்கூடாது நீதிபதி அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, : செல்போனில் ராங் கால் வந்தால், நீதிபதிகள் பேசக்கூடாது என்று திருத்துறைப்பூண்டியில் நடந்த வட்ட சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாமில் நீதிபதி மகாலட்சுமி பேசினார்.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் திருத்துறைப்பூண்டி வட்ட சட்ட பணிகள்குழு சார்பில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்ட சட்ட பணிகள்குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான மகாலெட்சுமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கௌதமன் வரவேற்றார். முகாமில் ஓய்வு பெற்ற தாசில்தார் தங்கராசு, வக்கீல் சிவசாகர் , வட்ட சட்ட பணிகள் குழு முதுநிலை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.

நீதிபதி மகாலெட்சுமி பேசுகையில், ஏழை, எளியவர்களுக்கு உதவ ஏற்படுத்தப்பட்டது தான் சட்ட உதவி மையம். நீதித்துறை என்ற தனியான அமைப்பு இந்தியாவில் இருப்பதால்தான் இந்தியா முன்னேறிக்கொண்டு இருக்கிறது. தற்போது செல்போன் மூலம் நிறைய குற்றங்கள் நடந்து வருகிறது. செல்போன் நம்பர்களை மாணவிகள் யாருக்கும் கொடுக்க கூடாது. ராங் நம்பர் வந்தால் பேசக்கூடாது. செல்போனில் நூதனமுறையில் ஏமாற்றவும், ஏமாறவும் செய்கிறார்கள்.

உங்கள் வீடுகளின் அருகில்  உள்ளவர்களுக்கு சட்ட சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு வட்ட சட்டபணிகள்குழு குறித்து தெரிவிக்கவேண்டும். குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தில் அப்பா அடிச்சாலும், அண்ணன் அடிச்சாலும் இச்சட்டத்தின்கீழ் வரும். இதற்கு மேஜராக இருக்க வேண்டும். மைனராக இருந்தால் அதற்கு தனிச்சட்டம் இருக்கிறது.  பெண்களுக்கு சகிப்பு தன்மை இல்லாமல் போய்விட்டது. அதை வளர்த்துக்கொள்ளவேண்டும். சின்ன பிரச்னைகளுக்கும் தனது மாமியார் வரதட்சணை கேட்பதாக வழக்கு தொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெண்களின் நடை, உடைகள் மற்றவர்கள் குற்றம் செய்ய தூண்டும் வகையில் இருக்க கூடாது.

இலவச வட்ட சட்டக்குழு கோர்ட் வளாகத்தில்தான் இருக்கிறது. 24 மணி நேரம் உதவி செய்ய காத்திருக்கிறது. இவ்வாறு நீதிபதி மகாலட்சுமி பேசினார். முடிவில் விரிவுரையாளர் திலகர் நன்றி கூறினார்.

வியாழன், 25 ஜூன், 2015

குடும்ப வன்முறையில் பெண்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை:மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்

குடும்ப வன்முறையில் பெண்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியது:

வரதட்சிணை தடுப்பு சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல சட்டம் என பெண்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தை அணுகி 60 நாட்களுக்குள் நியாயம் பெற்று கொள்ள சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடும்ப நிகழ்வு அறிக்கைகள் பாதுகாப்பு அலுவலாóகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுக உரிய உதவிகள் செய்யப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து புகார் வந்தால், விரைந்து தீர்வு காண ஒவ்வொரு வருவாய்க் கோட்டத்திலும் கோட்டாட்சியரை தலைவராகக் கொண்ட உட்கோட்ட தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அனைத்து குழந்தைகள் இல்லங்களையும் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றார் மதிவாணன்.

புதன், 24 ஜூன், 2015

3 இந்தியர்களுக்கு பிரிட்டன் அரசியின் இளம் தலைவர்கள் விருது

இங்கிலாந்தில், பிரிட்டன் அரசியின் இளம் தலைவர்கள் விருது 3 இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது.

காமன்வெல்த் நாடுகளில், தாங்கள் சார்ந்த சமூகத்துக்குத் தொண்டாற்றிய இளம் சாதனையாளர்களுக்கு பிரிட்டன் அரசி சார்பில் கடந்த ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான விருது, பக்கிங்ஹம் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்வினி அங்காடி, தேவிகா மாலிக், அக்ஷய் ஜதாவ் உட்பட 60 பேருக்கு வழங்கப்பட்டது.

பெங்களூரில் கண் பார்வையற்றோர் பயன் பெறும் வகையில் அதிக அளவில் பிரெய்லி, ஆடியோ புத்தகங்களை வெளியிடச் செய்தமைக்காக அஸ்வினி அங்காடிக்கும், மகாராஷ்டிராவின் கிராமப் பகுதியில் கல்விப் பணி ஆற்றியதற்காக அக்ஷய் ஜதாவுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைகள் அளித்தமைக்காக தேவிகாவுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுக்கு தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் ஆன் லைன் மூலமாக படிக்கும் வாய்ப்பு கிடைப்பதுடன் இங்கிலாந்து ராணியையும், பிரதமர் டேவிட் கேமரூனையும் சந்திக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்

1,400 டன் பொது​ரக அரிசி கன்​னி​யா​கு​ம​ரிக்கு ரயி​லில் அனுப்​பி​வைப்பு

திரு​வா​ரூர் மாவட்​டம்,​​ நீடா​மங்​க​லத்தி​லி​ருந்து 1,400 டன் பொது​ரக அரிசி சரக்கு ரயில் மூலம் கன்​னி​யா​கு​ம​ரிக்கு செவ்​வாய்க்​கி​ழமை அனுப்​பி​வைக்​கப்​பட்​டது.​

பாமணி மத்​திய சேமிப்​புக் கிடங்கு,​​ சுந்​த​ரக்​கோட்டை நவீன அரிசி ஆலை,​​ மன்​னார்​குடி வட்​டக் கிடங்கு ஆகி​ய​வற்றி​லி​ருந்து 116 லாரி​கள் மூலம் பொது​ரக அரிசி செவ்​வாய்க்​கி​ழமை நீடா​மங்​க​லம் ரயில் நிலை​யத்​துக்கு கொண்​டு​வ​ரப்​பட்​டது.​

பிறகு 1,400 டன் அரிசி மூட்​டை​கள் அனைத்​தும் சுமை தூக்​கும் தொழி​லா​ளர்​க​ளைக் கொண்டு சரக்கு ரயி​லின் 29 பெட்​டி​க​ளில் ஏற்​றப்​பட்டு பொது விநி​யோ​கத் திட்​டத்​துக்​காக கன்​னி​யா​கு​ம​ரிக்கு அனுப்​பி​வைக்​கப்​பட்​டது..

மூதாட்​டி​யின் முகத்​தில் மிள​காய்​பொடி தூவி 11 பவுன் நகை,​​ ரொக்​கம் திருட்டு

திரு​வா​ரூர் மாவட்​டம்,​​ கோட்​டூர் அருகே மூதாட்​டி​யின் முகத்​தில் மிள​காய் பொடியை தூவி,​​ அவர் அணிந்​தி​ருந்த 11 பவுன் நகை,​​ பீரோ​வில் இருந்த ரூ.​ 5 ஆயி​ரம் ரொக்​கத்தை மர்ம நபர்​கள் திரு​டிச் சென்​ற​னர்.​

ஆதிச்​சப்​பு​ரம்,​​ அக்​கி​ர​ஹார தெரு​வைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற ஆசி​ரி​யர் ராமா​னு​ஜம் ​(85).​ இவர் வயது மூப்​பின் கார​ண​மாக நினைவு இல்​லாத நிலை​யில் வீட்​டில் இருந்து வரு​கி​றார்.​

ராமா​னு​ஜம் வீட்​டின் பின்​பக்​கக் கதவு செவ்​வாய்க்​கி​ழமை மாலை தட்​டப்​பட்​ட​தை​ய​டுத்து,​​ வீட்​டில் இருந்த அவ​ரது மனைவி கன​க​வல்லி ​(75) கதவை திறந்​துள்​ளார்.​ அப்​போது,​​ அங்கு நின்​று​கொண்​டி​ருந்த மர்ம நபர்​கள் சிலர் கன​க​வல்​லி​யின் முகத்​தில் மிள​காய் பொடியை தூவி​ன​ராம்.​ இதில்,​​ மயங்கி விழுந்த கன​க​வல்லி சுமார் 2 மணி நேரம் கழித்து மயக்​கம் தெளிந்து எழுந்​த​போது,​​ அவர் அணிந்​தி​ருந்த 11 பவுன் சங்கிலி பறிக்​கப்​பட்​ட​தும்,​​ பீரோ​வில் இருந்த ரூ.​ 5 ஆயி​ரம் திருட்​டுப் போன​தும் தெரி​ய​வந்​துள்​ளது.​ ​ ​

இது​கு​றித்து கோட்​டூர் காவல் நிலை​யத்​துக்கு தக​வல் அளிக்​கப்​பட்​டதை அடுத்து,​​ திருத்​து​றைப்​பூண்டி காவல் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் கண்​ண​தா​சன்,​​ கோட்​டூர் காவல் ஆய்​வா​ளர் ஆனந்​த​பத்​ம​நா​பன் ஆகி​யோர் சம்​பவ இடத்​துக்​குச் சென்று விசா​ரணை நடத்​தி​னர்.​ புகா​ரின் பேரில்,​​ கோட்​டூர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​துள்​ள​னர்.​ திருட்டு நடை​பெற்ற வீட்​டில் தடய பதி​வும்,​​ திரு​வா​ரூரி​லி​ருந்து அழைத்து வரப்​பட்ட மெர்சி மோப்​ப​நாய் கொண்​டும் சோதனை நடத்​தப்​பட்​டது..

செவ்வாய், 23 ஜூன், 2015

சாதிகளற்ற சமுதாயம் படைப்போம் - விழிப்புணர்வு கலைப் பயணம்

நாகை, திருவாரூரில் "சாதிகளற்ற சமுதாயம் படைப்போம்' என்ற விழிப்புணர்வு கலைப் பயணம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்ககம், காவல்துறை சார்பிலான இந்த வீதி நாடக கலைப் பயணம் அந்தந்த மாவட்டங்களில்  பிரசார பணியில் ஈடுபடும்.

திருவாரூர் மாவட்டத்தில்... கூத்தாநல்லூர், இலையூர், கொட்டூர், இடையூர், குன்னியூர், முத்துப்பேட்டை, வாலியோடை ஆகிய ஊர்களில் பிரசாரம் நடைபெறவுள்ளது. 8 பேர் கொண்ட குழுவினர் வீதி நாடகம் மூலம் சாதிமத வேறுபாடுகளற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையிலான விழிப்புணர்வை திங்கள்,செவ்வாய்க்கிழமைகளில் ஏற்படுத்தவுள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலாó த. மோகன்ராஜ், முதன்மைத் கல்வி அலுவலாó மணி, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளாó முஹமது பனுதுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகையில்... கலைப் பயணத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் சு. பழனிசாமி பேசியது:

பொதுவான சமுதாயத்தை உருவாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதுகுறித்து வீதி நாடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கலைப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி ஆகிய ஒன்றியங்களில் திங்கள்கிழமை தொடங்கி ஜூன் 24 வரை ஒன்பது இடங்களில் பிரசாரம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட கோட்டாட்சியர் அ. சிவப்பிரியா, மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் எம். அமுதாராணி, மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கக கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் பி. சுப்பிரமணி, வட்டாட்சியர் கா. நாராயணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பெண்ணை தாக்கிய அண்ணன் உள்பட 2 பேர் கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் சரகம், மேலவாடியக்காடு கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் மனைவி மலர்க்கொடி(50). இவர் தனது சகோதரர் ராஜமாணிக்கத்திடம் நிலம் வாங்கி இருந்தாராம். அதுதொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ராஜமாணிக்கம், அவரது மனைவி சாந்தி மற்றும் உறவினர் முருகேசன் ஆகியோர் மலர்க்கொடியைத் தாக்கினார்களாம். காயமடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில், முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜமாணிக்கம், முருகேசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

திருவாரூரில் கலை இலக்கிய நிகழ்ச்சி

திருவாரூரில் சனிக்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது.

டாக்டர் அம்பேத்கர், பாரதிதாசன் ஆகியோரின் பிறந்த தினத்தையொட்டி கலை நிகழ்ச்சி, கிராமிய நாடகம், கிராமியப் பாடல்கள் மற்றும் நாடகங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சி மூலம் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், சமுதாய முன்னேற்றங்கள், அரசின் அலட்சியப் போக்கு, நிர்வாகத் திறமையின் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. கிளைத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கவிஞர் மனிதநேயன், கோவிந்தராஜ், பேராசிரியர் காண்டீபன், கவிஞர் சண்முகம்,  மாவட்ட தலைவர்கள் தியாகராஜன், வேதரத்தினம், செயலர் தாமோதரன், பொருளர்  சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, புதியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவிக சிலைக்கு மாலை அணிவித்த பின்பு பேரணி நடைபெற்றது. கிளைச் செயலர் கவிஞர் பகவன்ராஜ் வரவேற்றார். பொருளர் வரதராஜன் நன்றி கூறினார்.

ஞாயிறு, 21 ஜூன், 2015

திருத்துறைப்பூண்டியில் 21ம் தேதி லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

திருத்துறைப்பூண்டி, :  திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கம், லியோ சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கு விஜிலா மஹாலில் நடைபெறுகிறது. தலைவர் கைலாசநாதன் வரவேற்கிறார்.செயலாளர் சுப்பிரமணியன் செயல் அறிக்கை வாசிக்கிறார். புதிய தலைவராக கே.எஸ்.செந்தில்குமார், செயலாளராக சக்கரபாணி, பொருளாளராக வேதமணி, லியோ சங்க தலைவராக செல்வஅரசன், செயலாளராக பாலாஜி, பொருளாளராக சக்தீஸ்வரன் மற்றும் இதர நிர்வாகிகளை மாவட்ட முன்னாள் ஆளுநர் சுப்பிரமணியன் பதவியில் அமர்த்தி பேசுகிறார். பட்டி மன்ற பேச்சாளர் ராஜா, மாவட்ட ஆளுநர் தேர்வு வேதநாயகம், மண்டல் தலைவர் ரவிச்சந்திரன், வட்டார தலைவர் செபாஷ்ரோலி ஆகியோர் பேசுகிறார்கள். விழாவில் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டி பரிசு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

முதல் மனைவிக்கு மிரட்டல் கணவன் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி, :  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வாட்டார் வாளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் பைங்காநாடு அருகே உள்ள வண்ணார்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. மனைவி பெயர் மாலா (35). ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மாலா திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் மேரி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் எனது கணவர், மாமனார் தங்கராசு, மாமியார் தனலெட்சுமி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் எஸ்ஐ வெர்ஜினியா மற்றும் போலீசார் மாலாவின் கணவர் சண்முகம் உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி
வருகிறார்.

வியாழன், 18 ஜூன், 2015

வேதை பைபாஸ் சாலை ஓரத்தில் ஆண் சடலம் !!!


திருத்துறைப்பூண்டி நாகை வேதை பைபாஸ் சாலை ஓரத்தில் உள்ள புதரில் சுமார் 50 வயது தக்க  ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து விஏஓ சேக்தாவூது கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ரயில்வே ஊழியர் மனைவியிடம் நகை பறிப்பு

திருத்துறைப்பூண்டி, :திருத்துறைப்பூண்டி ரயில்வே காலனியில் வசிப்பவர் இளம்வழுதி ( 43). இவர் மன்னார்குடி ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இளம்வழுதி மற்றும் அவரது மனைவி பூங்கொடி இருவரும் தூங்கிகொண்டியிருந்தனர். நேற்று அதிகாலை வீட்டில் பின்பக்கம் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் பூங்கொடி ( 34) கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதன், 17 ஜூன், 2015

ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை போலீஸ் அதிகாரி எச்சரிக்கை

Image result for ஹெல்மெட்மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணியா மல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணதாசன் எச் சரிக்கை விடுத்தார்.

விழிப்புணர்வு பிரசாரம்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி வருகிற 1-ந் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட் டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருத்துறைப் பூண்டியில் போலீசார் விழிப் புணர்வு பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சிக்கு திருத்துறைப் பூண்டி போலீஸ் துணை சூப் பிரண்டு கண்ணதாசன் தலைமை தாங்கி மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு ஹெல் மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாச கங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந் திரன், சப்-இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணதாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

வருகிற 1-ந் தேதி முதல் மோட்டார்சைக்கிளில் செல் பவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் மீறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹெல்மட் அணிவதால் விபத் தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும். திருத்துறைப்பூண்டி பகுதி யில் ஹெல்மட் அணி யாமல் மோட்டார்சைக்கிளில் செல் பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

Image result for மாவூரில் மதுபானக் கடையை
திருவாரூர் அருகே மாவூரில்  மதுபானக் கடையை வேறு இடத்துக்கு  மாற்றக் கோரி, மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவூர் கடைவீதியில் பேருந்து நிலையம் அருகே பள்ளி, கோயில் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு செல்லும் வழியில் மதுபானக்கடையும், பாரும் உள்ளது. இங்கு மது குடிப்பவர்களின் தொல்லை அதிகரித்து மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரியுள்ளனர். ஆனால், இதுவரை கடையை அகற்றாததால், மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி, அப்பகுதி மக்கள் மற்றும் சிபிஎம் கட்சியினாó போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களுடன் அலுவலர்கள், காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

திருத்துறைப்பூண்டி நகர காங்கிரஸ் தலைவராக நகர்மன்ற உறுப்பினர் பி. எழிலரசனை

Image result for congress indiaதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகர காங்கிரஸ் தலைவராக நகர்மன்ற உறுப்பினர் பி. எழிலரசனை, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒப்புதலின் பேரில், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் நியமித்துள்ளார்.

செவ்வாய், 16 ஜூன், 2015

விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

நிகழாண்டு குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி, நாகை, திருவாரூரில்கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்கள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறாத நிலையில், நிகழாண்டும் குறுவைக்கு தண்ணீர் திறக்க இயலாது என்ற மாநில அரசின் அறிவிப்பு கண்டனக்குரியது. மாநில அரசின் குறுவை தொகுப்புத் திட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது.

எனவே, தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கு தரவேண்டிய 10 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்று குறுவைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

குறுவை பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையில்...நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் விவசாய சங்க மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாய சங்க மாநில துணைச் செயலர் த. இந்திரஜித் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எம். செல்வராஜ், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி. முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு

மார்க்சிஸ்ட் விவசாய சங்க ஒன்றியச் செயலர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாய சங்க ஒன்றியச் செயலர் வீரப்பன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஐ ஒன்றியச் செயலர் கே. வரதராஜன், சிபிஎம் வட்டச் செயலர் கே. நாகையா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ வி. மாரிமுத்து, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் ஆர். இடும்பையன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எம்எல்ஏ நாகைமாலி, சி.பி.ஐ. விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.சரபோஜி ஆகியோர் தலைமை வகித்தனர். தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சி.பி.எம். விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் டி.ராசய்யன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணியன், சி.பி.ஐ. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சம்பத் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கோழிப் பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் கோழிப் பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2015-16 நிதியாண்டில் மாவட்டத்தில் 160 கோழிப்பண்ணைகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 250 கோழிக் குஞ்சுகள் கொண்ட பண்ணை அமைக்க மொத்த திட்ட மதிப்பீடு ரூ.1,29,500 ஆகும். வங்கி மூலம் கடன் பெற்று பண்ணை தொடங்குபவர்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ. 32,375, பண்ணையை தொடாóந்து நடத்துவோருக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5,000, பண்ணையை பாதியில் விட்டுவிடாமல் நடத்துவோருக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.32,370 என ரூ.69,750 மானியமாக வழங்கப்பட உள்ளது.

வங்கிக் கடன் பெறாமல் சுயநிதியில் கட்டடம் கட்டி பண்ணை நடத்துபவாóகள் இத்திட்டத்தில் தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட்டால் அவாóகளுக்கு மாநில அரசால் வழங்கப்படும் மானியம் ரூ.37,375 வழங்கப்படும். கோழிப்பண்ணை நடத்த கொட்டகை அமைக்கும்போது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அங்கீகரித்த வடிவமைப்பில் இருக்க வேண்டும்.

அரசு நியமிக்கும் ஒருங்கிணைப்பாளார் மூலம் நாட்டுக்கோழிப் பண்ணை தொழில் தொடங்குவோருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். கிராம ஊராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். ஏற்கெனவே சிறிய அளவில் இத்தொழில் செய்வோருக்கு அபிவிருத்தி செய்யும் நோக்கில் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.

திட்டத்தில் பயனடைய விரும்புவோர் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள அருகிலுள்ள கால்நடை நிலைய கால்நடை மருத்துவாகளை அணுகவும், வங்கிக்கடன் பெற தங்கள் பகுதி வங்கி மேலாளாóகளை அணுகலாம்.

பேருந்தில் வந்த பெண்ணை தாக்கிய நபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் வந்த பெண்ணை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு கிராமத்தைச் சேர்நதவர் ஜெயசித்ரா.இவர் சனிக்கிழமை பாணி கிராமத்தில் பேருந்தில் ஏறி சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவரின் கைப்பையை பேருந்தில் வந்த தனியார் வங்கி ஊழியர் சேகல்மடப்புரத்தைச் சேர்ந்த வைரப்பன் மகள் சரண்யாவிடம் கொடுத்தாராம். அவர் பையை வாங்க மறுத்ததால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை தனது தந்தை வைரப்பனிடம் செல்லிடப்பேசி மூலமாக சரண்யா தெரிவித்தார்.

பேருந்து, சேகல்மடப்புரம் கிராமத்தில் வந்தபோது, வைரப்பன் பேருந்தில் ஏறி ஜெயசித்ராவை தாக்கினாராம்.

இதுகுறித்து ஜெயசித்ரா அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து வைரப்பனை கைது செய்தனர்.

சனி, 13 ஜூன், 2015

தீப்பிடித்து 100 டிவிக்கள் சேதம்

 திருத்துறைப்பூண்டி அருகே கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பழுது பார்க்க வந்திருந்த 100 டிவிக்கள் சேதமடைந்தன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (45). கட்டிமேடு கடைத்தெருவில் மாடியில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை கடை தீடீரென தீப்பிடித்து எரிந்தது. திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) வீரமணி தலைமையில் வீரர்கள் சென்று மேலும் தீ பரவாமல்  அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பழுதுபார்க்க வந்த 100க்கும்மேற்பட்ட பழைய டிவிகள் எரிந்து சாம்பலாகின. தீவிபத்துக்கான காரணம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விழா : பத்தாம் வகுப்பு தேர்வில் சிறந்த பள்ளிக்கு பாராட்டு

திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விழா திருத்துறைப்பூண்டி தெற்குவீதியில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற  தலைவர் கலைமகள் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேந்தர், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, வக்கீல் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் நேரு வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் காமராசு, திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், பாடலாசிரியர் உமாதேவி ஆகியோர் பேசினர்.

சாதனையார் சுரேஷ் மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் 2, 3, 4வது இடங்களை பிடித்த புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அந்தோணிமேரி, நெடும்பலம்அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்லத்துரை, எழிலூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, எம்எல்ஏ உலகநாதன் பாராட்டி பரிசு வழங்கி பேசினார். தப்பாட்டம், பாண்டிச்சேரி மக்கள் கலைக்குழு, கலைநிகழ்வுகள், நிஜ நாடகங்கள், அலங்காநல்லூர் அபிநயா கலைக்குழு, கரகாட்டம், மயிலாட்டம், திருச்சி பாரதி கலைக்குழு நய்யாண்டி தர்பார் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

வியாழன், 4 ஜூன், 2015

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெருக்கடி

Image result for திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி வழியாக திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்செந்தூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு

நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்று வருகின்றன.

மேலும், வேதாரண்யத்தில் இருந்து ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான உப்பு, சவுக்கு, சிலிகேட் மணல் லாரிகளும் புறவழிச்சாலை பணிகள்

தொடர்ந்து செயல்படுத்தப்படாத நிலையில், நகருக்குள் வந்தே வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையும், இவ்வழியே செல்வதால் வாகனப் போக்குவரத்து வெகுவாக அதிகரித்து வருகிறது.

அதோடு, திருவாரூர்-நாகை சாலையை இணைக்கும் புறவழிச் சாலை பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெறாமல் உள்ளது.

சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, மதுரை, குற்றாலம் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி,

நாகூர், திருக்கடையூர், சிதம்பரம், முத்துப்பேட்டை கோடியக்கரை ஆகிய ஊர்களுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரதான சாலையாக திருத்துறைப்பூண்டி

விளங்குவதால் நகரில் வாகனப் போக்குவரத்துக்கு பஞ்சமில்லை.

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் சரக்கு லாரிகள் நகருக்குள் சரக்குகளை இறக்கத் தடை இருந்தபோதிலும்,

அது முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. மேலும், ஆண்டுக்கு ஒருமுறை சம்பிரதாயத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், அடுத்த சில தினங்களில் மீண்டும்

ஆக்கிரமிப்புகள் தொடர்வதும் தொடர்கதையாகி வருகிறது.

மேலும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவது ஆகியவற்றில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினரிடையே

நிலவும் பனிப்போரும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு தடையாக உள்ளது.

புதிய, பழைய பேருந்து நிலையம், நீதிமன்ற சாலை உள்ளிட்ட பகுதிகளில், வரதராஜப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ள பகுதியில், காய்கறி, பழக்கடைகளில் சரக்கு லாரிகள்

எந்தநேரமும் நிற்பதாலும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

இதுகுறித்து ஆண்டுதோறும் மன்னார்குடி கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி நிர்வாகம், காவல் துறை, அரசு, தனியார் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் கொண்ட

ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இக்கூட்டம் நடைபெறாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றும்

பணிகள் நடைபெறாததே போக்குவரத்து நெருக்கடிக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றவும், தொடர்ந்து கண்காணிக்கவும், புறவழிச்சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தவும், போக்குவரத்து போலீஸார்

நிர்பந்தத்துக்கு ஆளாகாமல் பணியாற்றவும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இதில் தனிகவனம் செலுத்தி உறுதியான நடவடிக்கை

மேற்கொண்டு போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்.

செவ்வாய், 2 ஜூன், 2015

சினிமாக்காரர்களை தூக்கி கொண்டாடாதீர்கள்: நடிகை ரோகினி சுளீர்

திருவாரூர்: சினிமாவை பார்ப்பதோடு விட்டு விடுங்கள். அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அவர்களை அரியணை மேல் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என்று இளைஞர்களுக்கு நடிகை ரோகினி சுளீர் என அறிவுரை வழங்கினார்.




திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆதிரெங்கத்தில் நடந்த தேசிய அளவிலான நெல் திருவிழாவில் கலந்து கொண்ட நடிகை ரோகினி, பூச்சிகளும் நண்பர்களே எனும் நூலை வெளியிட்டு பேசுகையில், "இளைஞர்கள் சினிமா மாயைக்குள் மூழ்கி இருக்கின்றனர் என்பது கண்கூடாக பார்க்கக் கூடியதாக இருக்கிறது. சினிமாவில் பத்து பேரை சூர்யா அடிப்பதை ஏற்றுக் கொள்கிற இளைஞர்கள், அவர் நிஜ வாழ்கையில் அகரம் பவுண்டேசன் வைத்து அவர் செய்கிற செயல்களை ஏன் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டேன்குறாங்க?

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்குதான். காலையில் இருந்து மாலை வரை உழைத்து வரும் அவர்களை மகிழ்விப்பதற்கு தான் சினிமா.  இதை பொழுதுபோக்காக மட்டும் பாருங்கள். நாலு பாட்டு பார்த்தோமா, நாலு சண்டை பார்த்தோமா சந்தோசமா இருந்தது. அதோடு விட்டு விடுங்கள். அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று அரியணை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவது என்பதை செய்யாதீர்கள்.

காமிரா முன்னாடி பன்ச் வசனங்கள் பேசுவது எல்லாம் பெரிய பெரிய அறிஞர்கள் சொன்ன தத்துவங்களை பைஹார்ட் செய்து தான் உங்களிடம் தருகிறோம். அது எங்களுடையது கிடையாது.  சினிமாவில் நாங்கள் அணிகிற புடவை, ஆடைகள் எல்லாமே எங்களுக்கு சொந்தம் கிடையாது. சூட்டிங் முடிந்தவுடன் அதை திருப்பித் தர வேண்டும். இவை எப்படி எங்களுக்குச் சொந்தம் கிடையாதோ? அதை போலவே தான் உங்களுக்குள் ஏற்படுத்துகிற உத்வேகமும், வசனங்களின் உள்நோக்கமும் எங்களுடையது கிடையாது. அவை உங்களுடைய கஷ்டங்களையும், உழைப்பையும் நன்றாக புரிந்தவர்கள் எழுதி இருக்கும் வசனங்கள்.
 



வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் பார்த்ததில்லை. ஆனால், சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்திருப்பார். சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன் கிடையாது. அது அவருடைய நடிப்பு. இதை இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லுங்க, சினிமாவை எங்கே வைக்க வேண்டுமோ அங்க வைங்க?.

எழுதி இருக்கும் கருத்துகள், வசனங்கள் எல்லாம், வாழ்வின் வலியிலிருந்து உணர்விலிருந்து கொண்டு வந்தவை தான். அவை எல்லாவற்றையும் நடிக்கிறோமே தவிர, அதை நம்பி இவர்களை மேல கொண்டு போய் வச்சிராதீங்க. இதை எல்லாம் மீறி நாங்களும் மனுஷன் தான் என்று சினிமா துறையைச் சார்ந்தவர்கள் நினைக்கின்ற போது தான், பொது வாழ்வில் அடி எடுத்து வைக்கிறார்கள்.

நாங்கள் ஒலிப் பெருக்கியைப் போன்றவர்கள் தான், சாதாரண மக்கள் பேசுகிற போது கிடைக்கும் குவியத்தை (focus) விட, நாங்கள் ஒரு கருத்தை சொல்லும் போது கிடைக்கும் focus அதிகம் அவ்வளவு தான். இவை தாண்டி, இது போன்ற விழாக்களில் தான் கடவுளைக் காண முடிகிறது. இது தான் கடவுள், இது தான் கடவுள் வழிபாடு. இதைச் செய்யும் போது தான் இயற்கையின் சக்தி வெளிப்படுகிறது” என்றார்.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka