செவ்வாய், 23 ஜூன், 2015

சாதிகளற்ற சமுதாயம் படைப்போம் - விழிப்புணர்வு கலைப் பயணம்

நாகை, திருவாரூரில் "சாதிகளற்ற சமுதாயம் படைப்போம்' என்ற விழிப்புணர்வு கலைப் பயணம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்ககம், காவல்துறை சார்பிலான இந்த வீதி நாடக கலைப் பயணம் அந்தந்த மாவட்டங்களில்  பிரசார பணியில் ஈடுபடும்.

திருவாரூர் மாவட்டத்தில்... கூத்தாநல்லூர், இலையூர், கொட்டூர், இடையூர், குன்னியூர், முத்துப்பேட்டை, வாலியோடை ஆகிய ஊர்களில் பிரசாரம் நடைபெறவுள்ளது. 8 பேர் கொண்ட குழுவினர் வீதி நாடகம் மூலம் சாதிமத வேறுபாடுகளற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையிலான விழிப்புணர்வை திங்கள்,செவ்வாய்க்கிழமைகளில் ஏற்படுத்தவுள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலாó த. மோகன்ராஜ், முதன்மைத் கல்வி அலுவலாó மணி, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளாó முஹமது பனுதுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகையில்... கலைப் பயணத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் சு. பழனிசாமி பேசியது:

பொதுவான சமுதாயத்தை உருவாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதுகுறித்து வீதி நாடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கலைப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி ஆகிய ஒன்றியங்களில் திங்கள்கிழமை தொடங்கி ஜூன் 24 வரை ஒன்பது இடங்களில் பிரசாரம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட கோட்டாட்சியர் அ. சிவப்பிரியா, மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் எம். அமுதாராணி, மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கக கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் பி. சுப்பிரமணி, வட்டாட்சியர் கா. நாராயணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka