திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விழா திருத்துறைப்பூண்டி தெற்குவீதியில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் கலைமகள் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேந்தர், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, வக்கீல் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் நேரு வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் காமராசு, திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், பாடலாசிரியர் உமாதேவி ஆகியோர் பேசினர்.
சாதனையார் சுரேஷ் மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் 2, 3, 4வது இடங்களை பிடித்த புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அந்தோணிமேரி, நெடும்பலம்அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்லத்துரை, எழிலூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, எம்எல்ஏ உலகநாதன் பாராட்டி பரிசு வழங்கி பேசினார். தப்பாட்டம், பாண்டிச்சேரி மக்கள் கலைக்குழு, கலைநிகழ்வுகள், நிஜ நாடகங்கள், அலங்காநல்லூர் அபிநயா கலைக்குழு, கரகாட்டம், மயிலாட்டம், திருச்சி பாரதி கலைக்குழு நய்யாண்டி தர்பார் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக