திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி வழியாக திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்செந்தூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம், சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு
நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்று வருகின்றன.
மேலும், வேதாரண்யத்தில் இருந்து ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான உப்பு, சவுக்கு, சிலிகேட் மணல் லாரிகளும் புறவழிச்சாலை பணிகள்
தொடர்ந்து செயல்படுத்தப்படாத நிலையில், நகருக்குள் வந்தே வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையும், இவ்வழியே செல்வதால் வாகனப் போக்குவரத்து வெகுவாக அதிகரித்து வருகிறது.
அதோடு, திருவாரூர்-நாகை சாலையை இணைக்கும் புறவழிச் சாலை பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெறாமல் உள்ளது.
சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, மதுரை, குற்றாலம் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி,
நாகூர், திருக்கடையூர், சிதம்பரம், முத்துப்பேட்டை கோடியக்கரை ஆகிய ஊர்களுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரதான சாலையாக திருத்துறைப்பூண்டி
விளங்குவதால் நகரில் வாகனப் போக்குவரத்துக்கு பஞ்சமில்லை.
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் சரக்கு லாரிகள் நகருக்குள் சரக்குகளை இறக்கத் தடை இருந்தபோதிலும்,
அது முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. மேலும், ஆண்டுக்கு ஒருமுறை சம்பிரதாயத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், அடுத்த சில தினங்களில் மீண்டும்
ஆக்கிரமிப்புகள் தொடர்வதும் தொடர்கதையாகி வருகிறது.
மேலும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவது ஆகியவற்றில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினரிடையே
நிலவும் பனிப்போரும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு தடையாக உள்ளது.
புதிய, பழைய பேருந்து நிலையம், நீதிமன்ற சாலை உள்ளிட்ட பகுதிகளில், வரதராஜப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ள பகுதியில், காய்கறி, பழக்கடைகளில் சரக்கு லாரிகள்
எந்தநேரமும் நிற்பதாலும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
இதுகுறித்து ஆண்டுதோறும் மன்னார்குடி கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி நிர்வாகம், காவல் துறை, அரசு, தனியார் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் கொண்ட
ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இக்கூட்டம் நடைபெறாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றும்
பணிகள் நடைபெறாததே போக்குவரத்து நெருக்கடிக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றவும், தொடர்ந்து கண்காணிக்கவும், புறவழிச்சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தவும், போக்குவரத்து போலீஸார்
நிர்பந்தத்துக்கு ஆளாகாமல் பணியாற்றவும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இதில் தனிகவனம் செலுத்தி உறுதியான நடவடிக்கை
மேற்கொண்டு போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக