ஞாயிறு, 28 ஜூன், 2015

ராங் கால் வந்தால் மாணவிகள் பேசக்கூடாது நீதிபதி அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, : செல்போனில் ராங் கால் வந்தால், நீதிபதிகள் பேசக்கூடாது என்று திருத்துறைப்பூண்டியில் நடந்த வட்ட சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாமில் நீதிபதி மகாலட்சுமி பேசினார்.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் திருத்துறைப்பூண்டி வட்ட சட்ட பணிகள்குழு சார்பில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்ட சட்ட பணிகள்குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான மகாலெட்சுமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கௌதமன் வரவேற்றார். முகாமில் ஓய்வு பெற்ற தாசில்தார் தங்கராசு, வக்கீல் சிவசாகர் , வட்ட சட்ட பணிகள் குழு முதுநிலை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.

நீதிபதி மகாலெட்சுமி பேசுகையில், ஏழை, எளியவர்களுக்கு உதவ ஏற்படுத்தப்பட்டது தான் சட்ட உதவி மையம். நீதித்துறை என்ற தனியான அமைப்பு இந்தியாவில் இருப்பதால்தான் இந்தியா முன்னேறிக்கொண்டு இருக்கிறது. தற்போது செல்போன் மூலம் நிறைய குற்றங்கள் நடந்து வருகிறது. செல்போன் நம்பர்களை மாணவிகள் யாருக்கும் கொடுக்க கூடாது. ராங் நம்பர் வந்தால் பேசக்கூடாது. செல்போனில் நூதனமுறையில் ஏமாற்றவும், ஏமாறவும் செய்கிறார்கள்.

உங்கள் வீடுகளின் அருகில்  உள்ளவர்களுக்கு சட்ட சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு வட்ட சட்டபணிகள்குழு குறித்து தெரிவிக்கவேண்டும். குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தில் அப்பா அடிச்சாலும், அண்ணன் அடிச்சாலும் இச்சட்டத்தின்கீழ் வரும். இதற்கு மேஜராக இருக்க வேண்டும். மைனராக இருந்தால் அதற்கு தனிச்சட்டம் இருக்கிறது.  பெண்களுக்கு சகிப்பு தன்மை இல்லாமல் போய்விட்டது. அதை வளர்த்துக்கொள்ளவேண்டும். சின்ன பிரச்னைகளுக்கும் தனது மாமியார் வரதட்சணை கேட்பதாக வழக்கு தொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெண்களின் நடை, உடைகள் மற்றவர்கள் குற்றம் செய்ய தூண்டும் வகையில் இருக்க கூடாது.

இலவச வட்ட சட்டக்குழு கோர்ட் வளாகத்தில்தான் இருக்கிறது. 24 மணி நேரம் உதவி செய்ய காத்திருக்கிறது. இவ்வாறு நீதிபதி மகாலட்சுமி பேசினார். முடிவில் விரிவுரையாளர் திலகர் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka