திருவாரூரில் சனிக்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது.
டாக்டர் அம்பேத்கர், பாரதிதாசன் ஆகியோரின் பிறந்த தினத்தையொட்டி கலை நிகழ்ச்சி, கிராமிய நாடகம், கிராமியப் பாடல்கள் மற்றும் நாடகங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சி மூலம் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், சமுதாய முன்னேற்றங்கள், அரசின் அலட்சியப் போக்கு, நிர்வாகத் திறமையின் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. கிளைத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கவிஞர் மனிதநேயன், கோவிந்தராஜ், பேராசிரியர் காண்டீபன், கவிஞர் சண்முகம், மாவட்ட தலைவர்கள் தியாகராஜன், வேதரத்தினம், செயலர் தாமோதரன், பொருளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, புதியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவிக சிலைக்கு மாலை அணிவித்த பின்பு பேரணி நடைபெற்றது. கிளைச் செயலர் கவிஞர் பகவன்ராஜ் வரவேற்றார். பொருளர் வரதராஜன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக