செவ்வாய், 16 ஜூன், 2015

விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

நிகழாண்டு குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி, நாகை, திருவாரூரில்கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்கள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறாத நிலையில், நிகழாண்டும் குறுவைக்கு தண்ணீர் திறக்க இயலாது என்ற மாநில அரசின் அறிவிப்பு கண்டனக்குரியது. மாநில அரசின் குறுவை தொகுப்புத் திட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது.

எனவே, தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கு தரவேண்டிய 10 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்று குறுவைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

குறுவை பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையில்...நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் விவசாய சங்க மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாய சங்க மாநில துணைச் செயலர் த. இந்திரஜித் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எம். செல்வராஜ், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி. முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு

மார்க்சிஸ்ட் விவசாய சங்க ஒன்றியச் செயலர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாய சங்க ஒன்றியச் செயலர் வீரப்பன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஐ ஒன்றியச் செயலர் கே. வரதராஜன், சிபிஎம் வட்டச் செயலர் கே. நாகையா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ வி. மாரிமுத்து, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் ஆர். இடும்பையன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எம்எல்ஏ நாகைமாலி, சி.பி.ஐ. விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.சரபோஜி ஆகியோர் தலைமை வகித்தனர். தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சி.பி.எம். விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் டி.ராசய்யன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணியன், சி.பி.ஐ. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சம்பத் ஆகியோர் தலைமை வகித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka