செவ்வாய், 15 செப்டம்பர், 2015

திருத்துறைப்பூண்டி தொகுதியில் 2,16,573 வாக்காளர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 21,363 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களிடத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு மேலும் அவர் பேசியது:

5.1.2015 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 4,78,401 ஆண், 4,74,944 பெண், 7 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9,53,352 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அதன்பிறகு 6.1.2015 முதல் 14.9.2015 வரை நடைபெற்ற தொடர் திருத்தத்தில் 6,632 ஆண், 8,683 பெண், 2 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15,317 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல, தொடர் திருத்தத்தில் 9,676 ஆண், 11,687 பெண் வாக்காளர் என மொத்தம் 21,363 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 4,75,357 ஆண், 4,71,940 பெண், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9,47,306 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் விவரம்: 15.9.2015-ன்படி திருவாரூர் தொகுதியில் 1,23,401 ஆண், 1,24,157 பெண், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,47,567 வாக்காளர்களும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 1,08,513 ஆண், 1,08,060 பெண் என மொத்தம் 2,16,573, மன்னார்குடி தொகுதியில் 1,17,145 ஆண், 1,18,487 பெண் என மொத்தம் 2,35,632, நன்னிலம் தொகுதியில் 1,26,298 ஆண், 1,21,236 பெண் என மொத்தம் 2,47,534 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் 1,150 மொத்த வாக்குச்சாவடிகள் உள்ளன. வரைவு வாக்காளாó பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை முதலும், செப். 19, 30 தேதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

ட்ற்ற்ல்:ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற வலைத்தளத்தில் வாக்காளர் பட்டியலை காணலாம்.

1.1.2016-ஐ தகுதிநாளாகக் கொண்டு 18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், செவ்வாய்க்கிழமை முதல் (செப். 15) அக். 14-ம் தேதி வரை வாக்குச்சாவடிகளிலும், செப். 20, அக். 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களிலும் பெயர் சேர்க்க மார்பளவு புகைப்படம், இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான ஆதாரத்துடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். நீக்கம், திருத்தம் செய்ய வேண்டுமெனில் உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டும் பணி உலகநாதன் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டினார்

திருத்துறைப்பூண்டி டி.மு. கோர்டு சாலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை இயங்கி வந்தன. மன்னார்குடி சாலையில் விரைவு நீதிமன்றம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது.

திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கம், பொதுமக்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து அரசு ரூ.3 கோடியே 68 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது.


100 ஆண்டுகள் பழமையான மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. மன்னார்குடி சாலையில் உள்ள விரைவு நீதிமன்றத்திற்கு, குற்றவியல் நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து டி.மு. கோர்டு சாலையில் உள்ள இடத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி உலகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைமை நீதிபதி ஜாகீர்உசேன், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி ராம் ஆகியோர் பூமிபூஜைக்கு அடிக்கல் நாட்டினர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் சங்க தலைவர் அருள்செல்வன், செயலாளர் ரஜினி, பொருளாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் -அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Image result for அரசு ஊழியர் சங்கதிருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு ஊழியர் சங்க கூட்டம்

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 12-வது வட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். வட்ட துணைத்தலைவர்கள் சத்தியராணி, ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் வட்ட இணை செயலாளர் தர்மையன், வட்ட செயற்குழு உறுப்பினர் தனபால், வட்ட துணைத்தலைவர் சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் ஜெயபாலன், மாவட்ட இணை செயலாளர்கள் முருகானந்தம், வண்டார்குழலி உள்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிவேல் பேசினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால் நன்றி கூறினார்.

வேளாண்மை கல்லூரி

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

திருவாரூர்-அகஸ்தியன்பள்ளி, காரைக்குடி அகல ரெயில் பாதை திட்ட பணியை விரைந்து முடித்திட வேண்டும். திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் மாதிரி கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு இடம் தேர்வு செய்தமைக்கு தமிழக அரசை பாராட்டுவது. மேலும் கட்டிடம் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி தலைவராக சிவக்குமார், செயலாளராக மணிவண்ணன், பொருளாளராக வாசுமதி, துணைத்தலைவர்களாக வெங்கடேசு, ரூபன், ராமசாமி உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

சனி, 12 செப்டம்பர், 2015

திருத்துறைப்பூண்டி அருகே தொழிலாளி மர்மச் சாவு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை விவசாயத் தொழிலாளி மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருநெல்லிக்காவல் -புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன்(48). விவசாயத் தொழிலாளியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொக்காலடி நடுத்தெருவில் தனது மனைவி வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மதியழகி (40), மகன் தமிழரசன் (22), மகள் நந்தினி (12) ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், முருகையன் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தமாகா பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே வியாழக்கிழமை இரவு தமாகா பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (40). தமாகா பிரமுகர். இவரது மனைவி புனிதா முத்துப்பேட்டை ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இவரது வீட்டுக்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் பாலசுந்தரத்தைத் தாக்கினர்.பலத்த காயமடைந்த அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.இடப் பிரச்னை காரணமாக பாலசுந்தரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திங்கள், 7 செப்டம்பர், 2015

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் விமான நிறுவனத்தில் 598 அதிகாரி பணிகள்


விமான ஆணைய நிறுவனத்தில் 598 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என்று குறிப்பிடப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது மத்திய அரசின் மினிரத்னா அந்தஸ்து பெற்றது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 400 பணியிடங்களும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 198 இடங்களும் உள்ளன. மொத்தம் 598 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணியிடங்களில் இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 202 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 108 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 60 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 30 இடங்களும் உள்ளன.

அதேபோல ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பிரிவு பணியிடங்களில் ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 76 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 63 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 42 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 17 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31-10-15 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

பி.எஸ்சி. இயற்பியல், கணிதவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பாடங்களில் என்ஜினீயரிங்/டெக்னாலஜி பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் பூர்த்தி செய்தவர்கள் ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப பட்டப்படிப்புடன், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை :

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு எழுத்து தேர்வின் அடிப்படையிலும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 2014, 2015-ம் ஆண்டுகளின் கேட் தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஸ்டெப்-1, ஸ்டெப்-2 என இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஸ்டெப்-1 படிவம் சமர்ப்பித்த பிறகு, கட்டணம் செலுத்திவிட்டு ஸ்டெப்-2 படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 9-10-15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 13-10-15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை    www.aai.aero  என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொதுக்குழுக் கூட்டம்

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு கூட்டம் வட்டார தலைவர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் வேதரத்தினம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கிரிஜா, விஜயா, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் தெ.வேதரத்தினம் வரவேற்றார். கூட்டத்தில், 2013 ஜனவரி மாதத்தில் ஆசிரியர்களின் எல்ஐசி சந்தா தொகையை பிடித்தம் செய்ததை முறையாக அவரவர் கணக்கில் வரவு வைக்காததை பலமுறை நேரில் வலியுறுத்தி கேட்டும், சரிசெய்து கொடுக்காத திருத்துறைப்பூண்டி எல்ஐசி கிளை அலுவலகத்தின் போக்கை மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிப்பது. பணி மூப்பு பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, கவுன்சிலிங் முறையாக நடைபெற உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களை கேட்டுக்கொள்வது. திருத்துறைப்பூண்டியில் புதிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் கட்ட கலெக்டரை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தில் மாவட்ட செயலரும், மாநில துணைச் செயலாளருமான மதிவாணன் ஆகஸ்ட் 1ம்தேதி சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். வட்டார பொறுப்பாளர்கள் மெய்யநாதன், அரிகிருஷ்ணன், முருகையன், குணசேகரன், முருகானந்தம், செல்வமணி ஆகியோர் பேசினர். வட்டார பொருளாளர் அருள்ராஜ் நன்றி கூறினார்.

நெல் மூட்டைகள் ஏற்ற அனுமதி வழங்காததை கண்டித்து போராட்டம் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

திருத்துறைப்பூண்டி  பகுதியில் கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 3 லட்சத்து 2,400 நெல் மூட்டைகள் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கீழப்பாண்டி, பள்ளங்கோயில், விளக்குடி, கொக்கலாடி, சுந்தரபுரி ஆகிய இடங்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் மூட்டைகள் ரயில் வேகன் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் திருத்துறைப்பூண்டியில் ரயில் வசதி இல்லாததால் திருவாரூர் மற்றும் நீடாமங்கலம், பேரளம் போன்ற பகுதியில் உள்ள ரயில் நிலையம் மூலம் வேகனில் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவேண்டும். மேலும் இந்த பகுதியில் உள்ள நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் லோடு ஏற்றி திருவாரூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து ரயில் வேகன் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு இங்குள்ள லாரிகளுக்கு லோடு ஏற்ற அனுமதி வழங்கப்படுவதில்லை.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தாலுகா லாரி உரிமையாளர்கள் நல சங்க செயலாளர் அக்ரோ சீனிவாசன் கூறுகையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை இந்த பகுதியில் உள்ள லாரிகள் மூலம் திருவாரூருக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிமாட்டங்களுக்கு அனுப்புவதற்கு தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக  அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

20132014ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள லாரிகளுக்கு நெல் மூட்டைகள் லோடு ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இங்கிருந்து நீடாமங்கலம், பேரளம் பகுதிகளுக்கு லோடு ஏற்றப்பட்டது. தற்போது லோடு ஏற்ற அனுமதி வழங்காததால் தாலுகாவில் உள்ள  324 லாரிகளில் வேலைசெய்யும் 400க்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். எனவே லாரிகளுக்கு நெல் மூட்டைகள் ஏற்ற அனுமதி வழங்கா விட்டால் வருகிற 10ம்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

புதன், 29 ஜூலை, 2015

வேன் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 12 பேர் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே திங்கள்கிழமை வேன் கவிழ்ந்து 12 பள்ளி மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள எழிலூர், மருதவனம், களப்பால் பகுதிகளில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 32 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு தனியார் வேன் ஒன்று களப்பால் நோக்கி திங்கள்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது.

அந்த வேனை களப்பால் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் ஓட்டினார்.

வேன் எழிலூர் கிராமத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 12 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.

தகவலறிந்து நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று மாணவ, மாணவிகளை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காயமடைந்தவர்களில் பிரியதர்ஷினி (12), முகுந்தன், சசிதரன் (10), தேசிகா (11), வர்ஷினி (11), ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றவர்கள் அஜிதா, மாசிஷா, பவதாரிணி, ஜென்சிகிருஷ்ணா, விகாஷினி, அஸ்வினி உள்ளிட்ட 7 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் குமார் உள்ளிட்ட பல அலுவலர்கள் மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநர் முருகானந்தத்தை கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கம்

திங்கள், 27 ஜூலை, 2015

'ராக்கெட் நாயகன்' அப்துல் கலாம் காலமானார்

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் காலமானார்: அவருக்கு வயது 84

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இன்று ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் பேசுவதற்காக டெல்லியில் இருந்து சென்றார். அங்கே மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி சரிந்துவிட்டாராம் கலாம். உடனடியாக அவரை ஷில்லாங்கில் உள்ள Bethany மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்திருக்கிறார்கள். ஆனால், மாலை 7 மணி அளவில் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தபோதே கலாமின் உயிர் பிரிந்திருந்தது என அந்த மருத்துவமனையின் தலைமை இயக்குனர் டேவிட் சைலோ தெரிவித்துள்ளார். 7.45 மணிக்கு கலாம் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது மருத்துவமனை. கடுமையான மாரடைப்பால்தான் கலாம்-ன் உயிர் பிரிந்திருக்கலாம் என்கிறார் டேவிட் சைலோ.

அப்துல் கலாம்

அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.

இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை.

இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர்.

2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர்.

இவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.

84 வயதிலும் துவண்டு போகாமல் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து இயற்கையின் அவசியத்தையும், மரங்களின் முக்கியத்துவத்தையும் விதைத்தவர்.

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 1997ல் அப்துல் கலாம் பெற்றார்.

7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

அப்துல் கலாம் மறைவிற்காக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

விடுமுறை !

நாளை தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியின் ரத்ததான முகாம்

திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் நுகர்வோர் மன்றம், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர்  கௌதமன் தலைமை வகித் தார். அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் பியூலா லில்லி, டாக்டர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்வோர்மன்ற ஒருங்கிணைப்பாளர்  ராஜமாணிக்கம் வரவேற்றார். மருத்துவக்கல்லுரி ஊழியர்கள் கலைச்செல்வி, வனிதா, பிரியா, சுந்தர், சீனிவாசன், கோபி, ராஜசேகர் ஆகியோரைக் கொண்ட குழுவினர்  50 மாணவ மாணவியரிடமிருந்து 50 யூனிட் ரத்தம் சேகரித்தனர். முடிவில் செஞ்சுருள் சங்க செயலர் நன்றி கூறினார்.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

திருத்துறைப்பூண்டி நெட்டோடை குளத்தில் படர்ந்துள்ள வெங்காயதாமரை அகற்ற வேண்டும்மக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி நெட்டோடை குளத்தில் படர்ந்துள்ள வெங்காயதாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரம் தெருவில் உள்ள நெட்டோடை குளம் நீண்டகாலமாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 5 ஆண்டு காலமாக வெங்காய தாமரை படர்ந்து குளம் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இதுகுறித்து பாலம் தொண்டு நிறுவன இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், நெட்டோடை குளத்தில் உள்ள தண்ணீர் 5 வருடமாக வெளியேறவில்லை. குளத்தின் முகத்துவாரம் தூர்ந்து போய் ஆற்று நீர் உள்ளே வரமுடியாமலும், மழைநீர் வெளியேற முடியாமலும் போனதால், குளம் சாக்கடை போல் ஆகிவிட்டது. குளத்தில் உற்பத்தியாகும் கொசுக்களால் தெருமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

துர்நாற்றம் வீசுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி வருகிறது. நிம்மதியாக உணவு உண்ணமுடியவில்லை. வெங்காய தாமரை மெத்தைபோல் உள்ளதால்  பாம்பு, தேள், பூரான் போன்றவை தங்கி இரவு நேரங்களில் வீட்டிற்குள் வருகின்றன. இதனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர். சிறுவர்கள் பலமுறை இதில் தவறி விழுந்துள்ளனர்.மழை நேரங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி விடுவதால் மக்கள் செல்ல முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே குளத்தில் உள்ள வெங்காய தாமரையை அப்புறப்படுத்தி அசுத்த தண்ணீரை இறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டியில் என்எஸ்எஸ் மாணவர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி முகாம்

திருத்துறைப்பூண்டி லயன்ஸ் கிளப் மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட அமைவுகள் சார்பில் தலைமைப்பண்பு மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட புத்தாக்க பயிற்சி திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா மற்றும் லியோ கிளப் தலைவர் செல்வஅரசன், ஆசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார்.

ஆலத்தம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் குமணன், திருத்துறைப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் விஜயலட்சுமி, லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வகணபதி, பொருளாளர் வேதமணி, முன்னாள் செயலாளர் ஜோசப்ராஜ் ஆகியோர் பேசினர். தலைமைப்பண்பு என்கிற தலைப்பில் நெடும்பலம் பள்ளி ஆசிரியர் யோகராஜன் பேசினார். திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலரும், லயன்ஸ் கிளப் செயலாளருமான சக்கரபாணி நன்றி கூறினார்.   திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி,  புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சார்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர். மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. லியோ பொருளாளர் சக்தீஸ்வரன், மற்றும் திலிப்குமார், போஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சனி, 25 ஜூலை, 2015

விஏஓக்கள் 3 நாளாக இருந்த உண்ணாவிரதம் வாபஸ்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா அலுவலக வளாகத்தில்  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்திற்கான  கட்டிடம் புதிதாக கட்டும் பணி கடந்த 6 மாதத்திற்கு முன்பு துவங்கியது.இந்நிலையில் உரிய அனுமதி இல்லாததால் கட்டிடம் கட்டப்படுவதாக கூறி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தையின் போது அளித்த உறுதியை நிறை வேற்றாத கலெக்டரை கண்டித்து,  நகராட்சி அலு வலகம் அருகே கடந்த 20ம் தேதி முதல் 5நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை  திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் துவக்கினர்.  பணியினை புறக்கணித்து தொடர்ந்து 3 நாட்களாக வி.ஏ.ஒக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்ததால் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கும்  பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஒ முத்துமீனாட்சி நேற்று முன்தினம் மாலை வி.ஏ.ஒ சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக நேற்று முதல் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் சேகரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் நெடுமாறன் ஆகியோர் கூறுகையில், சங்க நிர்வாகிகள் ஆர்.டி.ஓவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சங்க கட்டடிம் பிரச்னை தொடர்பாக இருதரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கை சுமூகமாக  பேசி தீர்த்துகொள்வது.
மேலும் சங்க கட்டிடத்திற்கு அனுமதி கோரி கடந்த மாதம் 15 மற்றும் 16 தேதிகளில்  மாவட்டம் முழுவதும் நடைப்பெற்ற வி.ஏ.ஒ ஆர்ப்பாட்டத்தினையடுத்து 200வி.ஏ.ஒக்கள் மீது போடப்பட்டுள்ள 17பி ஆணையினையும், குடவாசல் சங்க பொறுப்பாளர் ஜெயபாலின் தற்காலிக பணி நீக்கத்தினையும் மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்று கொள்வது என்று உடன்பாடு எட்டப்பட்டதால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது என்றனர்.

சேமிப்பு கிடங்கு காவலாளி தூக்கு மாட்டி தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே நுகர்வோர் வாணிபகழக திறந்தவெளி சேமிப்பு கிடங்கு காவலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தேசிங்குராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார் (32). இவர் சுந்தரபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபகழக திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சங்கரி (28), 2 வயது ஆண் குழந்தையுடன் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு கடந்த 12ம் தேதி சென்று விட்டார். சதீஸ்குமார் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். கடந்த 22ம் தேதி இரவு சதீஸ்குமாருடன் போனில் சங்கரி பேசினார். இந்தநிலையில் நேற்று காலை  சங்கரி வீட்டிற்கு வந்தபோது மாடி வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. சந்தேகமடைந்த சங்கரி ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது வீட்டிற்குள் புடவையால் சதீஸ்குமார் தூக்கு மாட்டி சடலமாக தொங்கினார். சங்கரி கொடுத்த புகாரின் போரில் திருத்துறைப்பூண்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

ஆகஸ்ட்டில் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையை ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருவாரூரில் வியாழக்கிழமை, ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் மேலும் பேசியது: கங்களாச்சேரி சா.வீ. ராமகிருஷ்ணன்: கங்களாஞ்சே ரி, மூங்கில்குடி வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தண்ணீர் வருவதற்குள் அகற்ற வேண்டும். அனைத்து நெல் விதைகளுக்கும் கிலோவுக்கு ரூ. 15 மானியம் வழங்க வேண்டும். கூட்டுறவுக் கடன் காலத்தில் கொடுக்க வேண்டும்.

திருவாரூர் பி.எஸ். மாசிலாமணி: ஆகஸ்ட் முதல் வாரத்தில் மேட்டூர் அணை திறந்தால் சம்பா சாகுபடி நீண்டகால பயிர்களுக்கு நன்றாக இருக்கும்.

திருவாரூர் பவுன்ராஜ்: புதைச் சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட கேக்கரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருத்துறைப்பூண்டி தமிழ்ச்செல்வி: 2012-13 ஆம் ஆண்டில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்து நிகழாண்டுக்கு புதிய கடன் வழங்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி பாலகிருஷ்ணன்: முள்ளையாற்றில் கழிவுநீர் மற்றும் கழிவறை கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

பேரளம் வி. பாலகுமாரன்: குறுவை சிறப்புத் திட்டத்தில் பயன்பெறாத விவசாயிகள் சம்பாவில் பயன்பெறும் வகையில் சம்பா சிறப்புத் திட்டத்தை அறிவித்து பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருத்துறைப்பூண்டி ஜெயராமன்: அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் சம்பாவில் நீண்டகால சாகுபடி குறித்து வேளாண் அலுவலர்கள் ஆலோசனை தெரிவிக்க வேண்டும்.

ஆட்சியர் எம். மதிவாணன்: நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாவட்டத்தில் பணியாற்ற 43,000 தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் இப்பணிக்கு வருவது 18,300 பேர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறார்கள். இத்திட்டத்தில் பணியாற்ற தொழிலாளர்கள் வருவார்களேயானால் நிதி தாராளமாக ஒதுக்கப்படும் என்றார் மதிவாணன்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன், வெண்ணாறு கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதன், 22 ஜூலை, 2015

100 இடங்களில் பிரசார இயக்கம் விவசாயிகள் சங்கம் முடிவு

சாகுபடி வளர்ச்சி திட் டம் அறிவிக்க கோரி திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் பிரசார இயக்கம் நடத்த விவ சாயிகள் சங்கம் முடிவு செய்து உள்ளது.

நிர்வாக குழு கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் திரு வாரூரில் நடந்தது. கூட்டத் துக்கு சங்க மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங் கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட துணை தலை வர்கள் விசுவநாதன், யோக நாதன், மாவட்ட துணை செய லாளர்கள் ஜோசப், சவுந் தர்ராஜன், மாவட்ட பொரு ளாளர் பாண்டியன், நிர்வாகி கள் சிவஞானம், உலகநாதன், சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:-

புதிய பயிர் கடன்

2012-2013-ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக பயிர் கடனை தமிழக அரசு மத்திய கால கடனாக மாற்றி யது. மத்திய கால கடனுக்கான 2 தவணைகளை கட்டிய விவ சாயிகளுக்கு மட்டுமே புதிய பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. வறட்சியால் பாதிப்பு என அறிவித்த தமிழக அரசு, பயிர் கடன்களை உடனே தள்ளுபடி செய்து, நிபந்தனை யின்றி புதிய பயிர் கடனை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப் பின்படி கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்று மேட்டூர் அணையை திறந்து குறுவை சாகுபடியை பாதுகாக்க வேண்டும். ஒரு போக சம்பா சாகுபடி என்பதால் கட்டணம் இல்லாமல் உழவு பணிகளை அரசே செய்து தர வேண்டும். விதை மானியத்தை நேரடியாக விவசாயிகளிடமே வழங்க வேண்டும். தேவையான விதை, உரம் மற்றும் நிபந் தனையற்ற கடனை வழங்கி சம்பா சாகுபடியை காப்பாற்ற வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

பிரசார இயக்கம்

கூட்டத்தில், நீர் ஆதார பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கனிமம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் பாதுகாப்பு, பாரம் பரிய வேளாண்மை முறை பாதுகாப்பு, நதி நீர் இணைப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும், பயிர் சாகுபடி வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவிக்க கோரி யும் திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் பிரசார இயக்கம் நடத்துவது என்றும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

படித்த இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட முன்வர வேண்டும் இயற்கை மருத்துவர் அழைப்பு

திருவாரூர், :  திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே  மஞ்சக்குடி சுவாமி தயானந்தா பள்ளியில் இயற்கை வேளாண்மை மற்றும் பழந்தமிழ் நெல்வகைகள் குறித்த  கருத்தரங்கம்  நடந்தது. பள்ளி நிர்வாக அறங்காவலர் ஷீலாபாலாஜி தலைமை வகித்தார். ஆடுதுறை நெல் ஆராய்சி நிலைய இயக்குனர் ரவி, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ரவிசங்கர், பூச்சியியல் வல்லுநர் செல்வம், இயற்கை வேளாண் வல்லுனர் சித்தர், சுவாமி தயானந்தா கல்லூரி முதல்வர் வாசுதேவன், நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன், இயற்கை உழவர் இயக்கத்தை சேர்ந்த வரதராஜன், அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இயற்கை வேளாண்மையில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் இயற்கை மருத்துவர் சித்தர் பேசியதாவது: இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி, கீரை, சிறுதானியம் போன்ற பொருட்கள் மனிதனின் உயிரை காக்கக் கூடியவையாக உள்ளன. மாப்பிள்ளை சம்பா என்று அழைக்கப்படும் நெல்வகை மனிதனுக்கு ஏற்படும் பக்கவாதம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் வராமல் காக்கும் குணம் கொண்டவை. கைகுத்தல் அரிசியில் பி.காம்ப்ளக்ஸ் எனப்படும் சத்து அதிகமாக உள்ளது. இதேபோல் விலைமலிவாக கிடைக்கும் கத்தரிக்காய்களிலும் பி.காம்ளக்ஸ் சத்து அதிகமாக இருப்பதால் அதனை சாப்பிட்டால் அரிப்பு நோய் வரும் என்ற மூடநம்பிக்கையை மக்கள் கைவிட வேண்டும்.

பூச்சி கொல்லி மருந்துக்கு மானியம் அளிக்கும் அரசுகள் உயிரை காக்ககூடிய கைக்குத்தல் அரிசி, வெல்லம் போன்ற பொருட்களுக்கு மானியம் வழங்க முன்வராதது வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. வேளாண் துறையை மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் ஊக்குவித்தால் தற்போது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைவிட கூடுதலாக 120 கோடி பேருக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் துறையாக வேளாண்துறை அமையும்.
மேலும் அதிக லாபம் ஈட்டவும், இயற்கை விவசாயத்தின் மூலம் உயிரை காக்கக்கூடிய விவசாய பொருட்களை உற்பத்தி செய்யவும் படித்த இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட முன்வர வேண்டும் என்றார்.

கல்வியியல் கல்லூரி மாணவிகள் சாதனை
மயிலாடுதுறை, .  நாகை மாவட்டம் மயிலாடுதுறை குட் ஷமாரிட்டன் கல்வியியல் கல்லூரி மாணவிகள் 201415ம் ஆண்டிற்கான தேர்வில் கல்லூரி அளவில் அபிராமி (1018), ஆஷா (1015), சுகன்யா (1013) மதிப்பெண்களைப் பெற்று முறையே மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்தனர். தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் ராதாகிருஷ்ணன், செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டுக்கான காவல்துறை, நீதித்துறை கலந்தாய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 2015ஆம் ஆண்டுக்கான காவல்துறை, நீதித்துறை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி ஜாகீர் உசேன், முதன்மை நீதித்துறை நடுவர் ராம், மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்

த. ஜெயச்சந்திரன் மற்றும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி நீதித்துறை நடுவர்கள், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு வழக்குரைஞர்கள், மாவட்டத்திலுள்ள அனைத்து டிஎஸ்பிக்கள், காவல்துறையினர் பங்கேற்றனர். நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளின் நீதிமன்ற நடவடிக்கை விவரங்கள், நீதிமன்ற கோப்புக்கு எடுக்க வேண்டிய வழக்குகளின் விவரங்கள், நிலுவையில் உள்ள அழைப்பாணைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தவிர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் விசாரணையை விரைந்து முடித்து பாதிக்கப்பட்டவாóகளுக்கு நியாயம் கிடைக்க, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க துரித நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

செவ்வாய், 21 ஜூலை, 2015

கலெக்டரை கண்டித்து கிராம நிர் வாக அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம்

திருவாரூரில் கலெக்டரை கண்டித்து கிராம நிர் வாக அதிகாரிகள் நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த னர்.

உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டம் குட வாசல் கிராம நிர்வாக அதி காரியாக பணியாற்றி வந்த ஜெயபால் ஓய்வு பெறும் நாளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ஓய்வு பெறும் நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித் தும், பணி இடைநீக்க உத்தரவை திரும்பபெற கோரியும் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறி வித்து இருந்தது. அதன்படி நேற்றுமுன்தினம் உண்ணா விரத போராட்டம் தொடங் கியது. நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத் துக்கு சங்க மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் நெடுமாறன், மாவட்ட பொரு ளாளர் கதிரேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சந்திரசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கிராம நிர்வாக அதிகாரிகளின் தொடர் போராட்டம் காரணமாக நேற்று அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் சிரமப் பட்டனர்.

திருத்துறைப்பூண்டி அருகே மனைவி, மகன் மீது ஆசிட் வீச்சு; தொழிலாளி கைது

திருத்துறைப்பூண்டி அருகே மனைவி, மகன் மீது ஆசிட் வீசியதாக தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தொழிலாளி

திருத்துறைப்பூண்டி-திரு வாரூர் சாலையில் உள்ள வீரன் நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 60). இவருடைய மனைவி அன்னக்கிளி (50). இவர்களுடைய மகன் முருகை யன் (29). முருகையன் திருமண மாகி மனைவியுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் நரிக்குறவர் பிரிவை சேர்ந்தவர்கள். சங்கர் ஊர், ஊராக சென்று பாசிமணி, ஊசி உள்ளிட்ட பொருட்களை விற்கும் தொழிலாளி ஆவார். பச்சை குத்தும் தொழிலையும் செய்து வருகிறார். சங்கரும், அன்னக்கிளியும் கருத்து வேறு பாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்ற னர்.

இந்த நிலையில் நேற்றுமுன் தினம் இரவு அன்னக்கிளி வசித்து வந்த கூரை வீட்டுக்கு சென்ற சங்கர், குடும்பம் நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார். அதற்கு அன்னக்கிளி மறுத்த தாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், பச்சை குத்துவதற்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து அன் னக்கிளி மீது வீசினார். இதைதடுக்க வந்த மகன் முருகையன் மீதும் ஆசிட் பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

ஆசிட் பட்டதால் அலறி துடித்த அன்னக்கிளி, முருகை யன் ஆகிய 2 பேரும் உட னடியாக 108 ஆம்புலன்சு வேன் மூலம் திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.

பின்னர் மேல் சிகிச் சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட னர். அங்கு தாய்க்கும், மகனுக் கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. ஆசிட் ஊற் றிய போது லேசான காயம் அடைந்த சங்கருக்கு திருத் துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

கைது

இதுகுறித்து அன்னக்கிளி திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப் பிரண்டு கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய 4 பேர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைதுசெய்தனர்.

சங்கேந்தி பவுண்டடி தெருவைச் சேர்ந்தவர் செ. செல்வபிரகாஷ் (30). இவர் ஞாயிற்றுக்கிழமை சங்கேந்தி ஆட்டோ நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத், ராஜேஷ் ஆகியோரைப் பார்த்து கிண்டலாக ஏதோ கூறினாராம்.

இதைத்தொடர்ந்து, இருவரும் ஊரில் இருந்த தங்களது நண்பர்களிடம் செல்போனில் தகவல் தெரிவித்ததன் பேரில், த. ராஜேஷ், எஸ். சம்பத், பி. ஆனந்த், ஆர். சிதம்பரம், ப. கார்த்தி, கே. மணிமாறன், பிரதீஷ் உள்ளிட்டோர் வந்து ஆயுதங்களால் செல்வபிரகாஷை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து எடையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷ், கார்த்தி, பிரதீஷ், மணிமாறன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை பணியை விரைவுபடுத்த நடவடிக்கை

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நாகப்பட்டினம் எம்.பி. கே. கோபால்.

திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை கட்டுமானப் பணி மற்றும் சீரமைப்புப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியது:

காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டு முதல் கட்டமாக சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பெரிய பாலம் அமைக்கும் பணி தொடங்கும். மன்னார்குடி - சென்னை விரைவு ரயில் தஞ்சாவூர் வழியாக செல்கிறது. இதனால் இரண்டு ரயில் நிலையங்களில் என்ஜின் மாற்ற வேண்டியிருப்பதால் நேரம் மற்றும் செலவும் அதிகமாகிறது. எனவே அறிவித்தபடி திருவாரூர் வழியாக மன்னார்குடி - சென்னை ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை விரைவில் திருவாரூர் வழியாக இயக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

காலை 8 மணிக்கு பிறகு திருவாரூர் ரயில் நிலையம் வழியாக பிற்பகல் 2 மணி வரை ரயில்கள் இல்லை. எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஆய்வின்போது துணை முதன்மை பொறியாளர் திருமலை உடனிருந்தார்.

திங்கள், 20 ஜூலை, 2015

கோடியக்கரை - தஞ்சை சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படுமா?

கோடியக்கரையில் இருந்து வேதாரண்யம் -வாய்மேடு, திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி, வடுவூர் - தஞ்சாவூர் வரையிலான 110 கி.மீ. சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை - வேதாரண்யம் வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதியாகும். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிப்பது போல கோடியக்கரையில் பாக் ஜலசந்தியும், வங்காள விரிக்குடாவும் இணைகின்ற பகுதியாகும். காந்தி தண்டியில் உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டபோது, திருச்சியில் இருந்து இந்த வழியாகவே ராஜாஜி உப்பு சத்தியாகிரக யாத்திரை மேற்கொண்ட சிறப்பு வாய்ந்தது. புகழ்பெற்ற வன விலங்குகள் சரணாயலயமும் இங்கு அமைந்துள்ளது. ஆடி, தை, மகாளய அமாவாசைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் சேதுக் கடலும் இங்கு அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும்.

மேலும் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக கோடியக்கரை, வேதாரண்யம் பகுதியில் அதிகம் உப்பு உற்பத்தியாகிறது. சவுக்கு மரங்கள் உற்பத்தியும், மல்லிகைப்பூ, கண்ணாடி இழை தயாரிப்புக்கு மூலப்பொருளான சிலிகேட் மணல் ஆகியவையும் இங்கு அதிகம் கிடைக்கின்றன.

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் ஆமை வேகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு இல்லாததால், இந்தப் பணிகள் முடிய மேலும் சில ஆண்டுகளாகும். மேலும், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் புறவழிச்சாலைகள் இல்லாத நிலையில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான உப்பு, சவுக்கு லாரிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருத்துறைப்பூண்டி நகரின் வழியாகவே செல்ல வேண்டி உள்ளது.

இதனால், குறுகிய இந்த சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் சாலை விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோவை, பழனி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், ஊட்டி, கொடைக்கானல் போன்ற நகரங்களுக்கு செல்லவும் இந்த வழியையே பயன்படுத்துகின்றனர்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையும் திருத்துறைப்பூண்டி வழியாகவே செல்வதால், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருநது ராமேசுவரம், கன்னியாக்குமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை, உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும் கேரள மாநிலத்துக்கு செல்லவும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு இணைப்பு சாலையாகவும் விளங்குகிறது. கோடியக்கரை - தஞ்சை வரையிலான 110 கி.மீ. வழித்தடத்தை தேசிய நெடுóஞ்சாலையாக தரம் உயர்த்த தேசிய நெடுóஞ்சாலை ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டு ஆய்வுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற நிலையில், இத் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அடுத்த ஆண்டு பிப். 8-ல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகோதய அமாவாசை நடைபெறவுள்ளதால், நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் இங்கு புனித நீராடி, முன்னோர்களை வழிபட வருவர் என்று எதிர்பார்ப்பதால், அதற்கு முன்னதாக இச் சாலையை தரம் உயர்த்த வேண்டியது அவசியமாகிறது. பெருகி வரும் மக்கள்தொகை, அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த சாலையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் இதை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பதே தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

ஊராட்சி உறுப்பினர் மீது தாக்குதல் வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் சாமியப்பன் மகன் பாலையன் (வயது39). இவர் மேட்டுபாளையம் ஊராட்சியில் 2–வது வார்டு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். சம்பவத்தன்று பாலையன் அதே பகுதியில் உள்ள கடையில் இருந்து பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் அருள் (25) என்பவர், தெருவிளக்கு சரியில்லை, குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என்று கூறி பாலையனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பாலையன் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்–இன்ஸ்பெக்டர் அருள்பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்தனர்.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

 திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. தலைவர் வக்கீல் ராஜாராமன் வரவேற்றார். செயலாளர் பாலு செயல் அறிக்கை வாசித்தார். புதிய தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் கணேசன், பொருளாளர் குமணன் மற்றும் நிர்வாக பொறுப்பாளர்களை மாவட்ட துணை ஆளுநர் ஆதப்பன் பணியமர்த்தினார். மாவட்ட முன்னாள் ஆளுநர் அசோகா பேசினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்3  இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 2,3,4 இடங்களை பிடித்த திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆலிஸ்எமிலி, தலைமையாசிரியை அந்தோணிமேரியிடம் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் ரோட்டரி சங்கம் சார்பில் பாண்டிச்சேரி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் ஒரு மாணவனுக்கும் மருத்துவக்கல்லுாரியில் ஒரு நர்சிங் மாணவிக்கும் இலவசமாக படிக்க ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாதவிக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. நாட்டுநலப்பணித்திட்டத்தில் மாநில அரசின் விருது பெற்ற அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ்அலுவலர் சக்கரபாணிக்கு சான்றிதழ் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆதிரெங்கம் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. வர்த்தகர்கள் சங்கம், லயன்ஸ், ரோட்டரி, டெல் டா ரோட்டரி, ஜேசீஸ், இன்னர்வீல் சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka