திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் நுகர்வோர் மன்றம், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் கௌதமன் தலைமை வகித் தார். அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் பியூலா லில்லி, டாக்டர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்வோர்மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் வரவேற்றார். மருத்துவக்கல்லுரி ஊழியர்கள் கலைச்செல்வி, வனிதா, பிரியா, சுந்தர், சீனிவாசன், கோபி, ராஜசேகர் ஆகியோரைக் கொண்ட குழுவினர் 50 மாணவ மாணவியரிடமிருந்து 50 யூனிட் ரத்தம் சேகரித்தனர். முடிவில் செஞ்சுருள் சங்க செயலர் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக