திருவாரூர், : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா பள்ளியில் இயற்கை வேளாண்மை மற்றும் பழந்தமிழ் நெல்வகைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. பள்ளி நிர்வாக அறங்காவலர் ஷீலாபாலாஜி தலைமை வகித்தார். ஆடுதுறை நெல் ஆராய்சி நிலைய இயக்குனர் ரவி, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ரவிசங்கர், பூச்சியியல் வல்லுநர் செல்வம், இயற்கை வேளாண் வல்லுனர் சித்தர், சுவாமி தயானந்தா கல்லூரி முதல்வர் வாசுதேவன், நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன், இயற்கை உழவர் இயக்கத்தை சேர்ந்த வரதராஜன், அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இயற்கை வேளாண்மையில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் இயற்கை மருத்துவர் சித்தர் பேசியதாவது: இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி, கீரை, சிறுதானியம் போன்ற பொருட்கள் மனிதனின் உயிரை காக்கக் கூடியவையாக உள்ளன. மாப்பிள்ளை சம்பா என்று அழைக்கப்படும் நெல்வகை மனிதனுக்கு ஏற்படும் பக்கவாதம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் வராமல் காக்கும் குணம் கொண்டவை. கைகுத்தல் அரிசியில் பி.காம்ப்ளக்ஸ் எனப்படும் சத்து அதிகமாக உள்ளது. இதேபோல் விலைமலிவாக கிடைக்கும் கத்தரிக்காய்களிலும் பி.காம்ளக்ஸ் சத்து அதிகமாக இருப்பதால் அதனை சாப்பிட்டால் அரிப்பு நோய் வரும் என்ற மூடநம்பிக்கையை மக்கள் கைவிட வேண்டும்.
பூச்சி கொல்லி மருந்துக்கு மானியம் அளிக்கும் அரசுகள் உயிரை காக்ககூடிய கைக்குத்தல் அரிசி, வெல்லம் போன்ற பொருட்களுக்கு மானியம் வழங்க முன்வராதது வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. வேளாண் துறையை மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் ஊக்குவித்தால் தற்போது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைவிட கூடுதலாக 120 கோடி பேருக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் துறையாக வேளாண்துறை அமையும்.
மேலும் அதிக லாபம் ஈட்டவும், இயற்கை விவசாயத்தின் மூலம் உயிரை காக்கக்கூடிய விவசாய பொருட்களை உற்பத்தி செய்யவும் படித்த இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட முன்வர வேண்டும் என்றார்.
கல்வியியல் கல்லூரி மாணவிகள் சாதனை
மயிலாடுதுறை, . நாகை மாவட்டம் மயிலாடுதுறை குட் ஷமாரிட்டன் கல்வியியல் கல்லூரி மாணவிகள் 201415ம் ஆண்டிற்கான தேர்வில் கல்லூரி அளவில் அபிராமி (1018), ஆஷா (1015), சுகன்யா (1013) மதிப்பெண்களைப் பெற்று முறையே மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்தனர். தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் ராதாகிருஷ்ணன், செயலர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக