திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்திற்கான கட்டிடம் புதிதாக கட்டும் பணி கடந்த 6 மாதத்திற்கு முன்பு துவங்கியது.இந்நிலையில் உரிய அனுமதி இல்லாததால் கட்டிடம் கட்டப்படுவதாக கூறி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தையின் போது அளித்த உறுதியை நிறை வேற்றாத கலெக்டரை கண்டித்து, நகராட்சி அலு வலகம் அருகே கடந்த 20ம் தேதி முதல் 5நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் துவக்கினர். பணியினை புறக்கணித்து தொடர்ந்து 3 நாட்களாக வி.ஏ.ஒக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்ததால் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஒ முத்துமீனாட்சி நேற்று முன்தினம் மாலை வி.ஏ.ஒ சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக நேற்று முதல் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் சேகரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் நெடுமாறன் ஆகியோர் கூறுகையில், சங்க நிர்வாகிகள் ஆர்.டி.ஓவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சங்க கட்டடிம் பிரச்னை தொடர்பாக இருதரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கை சுமூகமாக பேசி தீர்த்துகொள்வது.
மேலும் சங்க கட்டிடத்திற்கு அனுமதி கோரி கடந்த மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் மாவட்டம் முழுவதும் நடைப்பெற்ற வி.ஏ.ஒ ஆர்ப்பாட்டத்தினையடுத்து 200வி.ஏ.ஒக்கள் மீது போடப்பட்டுள்ள 17பி ஆணையினையும், குடவாசல் சங்க பொறுப்பாளர் ஜெயபாலின் தற்காலிக பணி நீக்கத்தினையும் மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்று கொள்வது என்று உடன்பாடு எட்டப்பட்டதால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது என்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக