கோடியக்கரையில் இருந்து வேதாரண்யம் -வாய்மேடு, திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி, வடுவூர் - தஞ்சாவூர் வரையிலான 110 கி.மீ. சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் கோடியக்கரை - வேதாரண்யம் வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதியாகும். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிப்பது போல கோடியக்கரையில் பாக் ஜலசந்தியும், வங்காள விரிக்குடாவும் இணைகின்ற பகுதியாகும். காந்தி தண்டியில் உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டபோது, திருச்சியில் இருந்து இந்த வழியாகவே ராஜாஜி உப்பு சத்தியாகிரக யாத்திரை மேற்கொண்ட சிறப்பு வாய்ந்தது. புகழ்பெற்ற வன விலங்குகள் சரணாயலயமும் இங்கு அமைந்துள்ளது. ஆடி, தை, மகாளய அமாவாசைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் சேதுக் கடலும் இங்கு அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும்.
மேலும் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக கோடியக்கரை, வேதாரண்யம் பகுதியில் அதிகம் உப்பு உற்பத்தியாகிறது. சவுக்கு மரங்கள் உற்பத்தியும், மல்லிகைப்பூ, கண்ணாடி இழை தயாரிப்புக்கு மூலப்பொருளான சிலிகேட் மணல் ஆகியவையும் இங்கு அதிகம் கிடைக்கின்றன.
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் ஆமை வேகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு இல்லாததால், இந்தப் பணிகள் முடிய மேலும் சில ஆண்டுகளாகும். மேலும், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் புறவழிச்சாலைகள் இல்லாத நிலையில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான உப்பு, சவுக்கு லாரிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருத்துறைப்பூண்டி நகரின் வழியாகவே செல்ல வேண்டி உள்ளது.
இதனால், குறுகிய இந்த சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் சாலை விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோவை, பழனி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், ஊட்டி, கொடைக்கானல் போன்ற நகரங்களுக்கு செல்லவும் இந்த வழியையே பயன்படுத்துகின்றனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையும் திருத்துறைப்பூண்டி வழியாகவே செல்வதால், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருநது ராமேசுவரம், கன்னியாக்குமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை, உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும் கேரள மாநிலத்துக்கு செல்லவும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு இணைப்பு சாலையாகவும் விளங்குகிறது. கோடியக்கரை - தஞ்சை வரையிலான 110 கி.மீ. வழித்தடத்தை தேசிய நெடுóஞ்சாலையாக தரம் உயர்த்த தேசிய நெடுóஞ்சாலை ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டு ஆய்வுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற நிலையில், இத் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அடுத்த ஆண்டு பிப். 8-ல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகோதய அமாவாசை நடைபெறவுள்ளதால், நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் இங்கு புனித நீராடி, முன்னோர்களை வழிபட வருவர் என்று எதிர்பார்ப்பதால், அதற்கு முன்னதாக இச் சாலையை தரம் உயர்த்த வேண்டியது அவசியமாகிறது. பெருகி வரும் மக்கள்தொகை, அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த சாலையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் இதை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பதே தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக