திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோயில் கிராம எல்லையில் பொதுப்பணித்துறை சார்பில் முள்ளியாற்றின் குறுக்கே அமைந்துள்ள பள்ளங்கோயில் வடிகால் கீழ்குமிழியை சிறப்பு பழுது பார்க்கும் பணி, ஜாம்புவானோடை அருகே உள்ள கந்தபரிச்சனார் வடிகாலின் கடைமடையில் புதிய ரெகுலேட்டர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை திருச்சி மண்டல் தலைமை பொறியாளர் அசோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணித்தள விரைந்து முடிக்கும்படி தள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். தஞ்சாவூர் கீழ்காவிரி வடிநில வட்ட சிறப்பு தலைமை பொறியாளர் சம்பத், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சங்கர், மூர்த்திராஜன், உதவி பொறியாளர்கள் சண்முகம், கலையரசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக