வியாழன், 26 மே, 2011

முத்துப்பேட்டை அருகே இடி தாக்கி விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே இடி தாக்கி விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.

முத்துப்பேட்டை அருகிலுள்ள கீழநம்மங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வயலில் ஆடுகளை பட்டியில் கட்டிவிட்டு, அங்கேயே காவலுக்குப் படுத்திருந்தாராம். அப்போது இடி, மின்னலுடன் பலத்த பலத்த மழை பெய்தது. மேலும் இடி தாக்கியதில் உடல் கருகி ராஜமாணிக்கம் இறந்தார். மேலும் 3 ஆடுகளும் உடல் கருகி இறந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவி அளித்த புகாரின் பேரில், முத்துப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 13வது முறையாகவும், உலகநாதன் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தனி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 13வது முறையாகவும், உலகநாதன் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உலகநாதன் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க., கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக செல்வதுரை போட்டியிட்டார்.

மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 540 வாக்குகள் பதிவானது. உலகநாதன் 83 ஆயிரத்து 339 வாக்குகள் பெற்றார். செல்வதுரை 61 ஆயிரத்து 112 வாக்குகள் பெற்றார். 2006ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்டு அ.தி.மு.க., வேட்பாரை விட 22 ஆயிரத்து 706 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற உலகநாதன் தற்போதை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்டு கடந்த தேர்லை விட ஆயிரத்து 589 வாக்குள் குறைவாக பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் செல்வதுரையை 21 ஆயிரத்து 117 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka