ஞாயிறு, 31 ஜனவரி, 2016

கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

திருவாரூரில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், வேளாண் இணை இயக்குனர் மயில்வாகணன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெரியகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் பேசியதாவது:-

கடந்த சில ஆண்டு முதல் தொடர்ந்து நிலவி வரும் வறட்சி மற்றும் வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2012-13-ம் ஆண்டு வறட்சி மாவட்டமாக அறிவித்து கூட்டுறவு கடன்களை மத்திய கால கடனாக மாற்றம் செய்யப்பட்டது. வட்டியில்லா கடனுக்கு 13 சதவீதம் மற்றும் அபராத வட்டி கணக்கிடப்பட்டுள்ளது. இதில் கடன் தொகை செலுத்தியவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். 

முற்றுகை போராட்டம்

கும்பகோணம் மகாமகத்துக்காக தண்ணீர் தேவையென்றால் அந்த விழாவுக்காக மட்டும் தண்ணீர் திறக்கலாம். அதை தவிர்த்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதி வரை மேட்டூர் அணை நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்ற அறிவிப்பு தேவையற்றது என தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து கலெக்டர் இருக்கை எதிரே தரையில் விவசாயிகள் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

உளுந்து விதை

கோதண்டராமன்:- நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் உளுந்து கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் பயன்பெற உளுந்து விதை இலவசமாக வழங்க வேண்டும். வாலைக்குளம் பகுதியிலுள்ள ஏரியை தூர்வாருவதுடன், ஏரி மண்ணை விவசாயிகள் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி:- கடந்த ஆண்டில் கொரடாச்சேரி பகுதியில் தண்ணீர் பிரச்சினையாலும், வலங்கைமானில் வயலில் தேங்கிய தண்ணீர் வடியாததாலும் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த பிரச்சினைக்கு காரணமான பாசன வாய்க்கால் இதுவரை தூர்வாரப்படவில்லை. 

சேதுராமன்:- வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை ரத்து செய்வதுடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். 

சத்தியநாராயணன்:- கோடை சாகுபடிக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அறுவடை காலம் என்பதால் கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் நெல் உலர் எந்திரம் வாங்கி வைக்க வேண்டும். மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து நிலுவையிலுள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும். 

மருதப்பன்:- திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்.

இவ்வாறு விவாதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

சனி, 30 ஜனவரி, 2016

திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆய்வு

Image result for court building iconதிருத்துறைப்பூண்டியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

திருத்துறைப்பூண்டி நீதிமன்ற சாலையில் ரூ. 3.42 கோடியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் ஆகிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். மகாலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கட்டடத்தில் கலவை மண்ணுக்குப் பதிலாக களிமண் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்து, களிமண்ணை அகற்றிவிட்டு கலவை மண் போடவேண்டுமென்று உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஜே. சிவசுப்பிரமணியன், செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செவ்வாய், 26 ஜனவரி, 2016

பி.கே.டி. மருத்துவக் குழுமங்களின் அனன்யா கருத்தரிப்பு மையம் திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நவீன கருவிகளுடன் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அனன்யா கருத்தரிப்பு மையத்தை நாகை மக்களவை உறுப்பினர் கே. கோபால் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் கே. உமாமகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழுத் தலைவர் வேதநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குழந்தைகள் நல மருத்துவரும், ஜி.டி. பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் டி. ராஜா வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா, நமது நெல்லைக்காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல். ஜெயராமன், வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ். செந்தில்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ். கணேசதேவர், பொறியாளர் ஆர். செல்வகணபதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன். வாசுகிராமன், பாரதமாதா தொண்டு நிறுவன இயக்குநர் எடையூர் மணிமாறன், சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சுரேஷ்பாபு, ஜேசீஸ் தலைவர் ஆர். அரவிந்த், டாக்டர் பிரேம்குமார் தாமஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

இதில் டாக்டர்கள் பா.சு. மணி, மாசிலாமணி, கே. உமாராணி, சி.ஜெ. ரவி, லட்சுமிநாராயணன், ராஜாமுத்தையா பல் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் ராஜசிகாமணி, ஏ.ஆர்.எஸ். ரவி, வர்த்தகர் சங்கச் செயலர் எம். கணபதி பிரவிமருந்தீசர் கோயில் செயல் அலுவலர் என். பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவில், அனன்யா கருத்தரிப்பு மைய நிர்வாக இயக்குநர் டாக்டர் ஷருண் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை பி.கே.டி. மருத்துவக் குழுமங்களின் நிறுவனர் டாக்டர் பி.கே. தமிழரசி, டாக்டர் இந்துமதி ஆகியோர் செய்திருந்தனர்.

திருத்துறைபூண்டியை சேர்ந்த மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக தாயார் புகார்

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த மாணவி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் புகார் கூறி உள்ளார்.

மாணவி சாவு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்தவர் முத்தையா. இவர் அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பெயர் பார்வதி. இவர்களுடைய மகள் சண்முக பிரீத்தா (வயது 19) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 2–ம் ஆண்டு (செராமிக்) படித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு மாணவி சண்முக பிரீத்தா, விடுதி கட்டிட மாடியில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் கீழே விழுந்தார். இதையடுத்து பதறிப்போன சக மாணவிகள், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முக பிரீத்தாவை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார்.

காரணம் என்ன?
இதற்கிடையில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தகவல் பரவியது. செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது கால் தவறி கீழே விழுந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டது. உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்துக்கு மாணவி சண்முக பிரீத்தாவின் உடல் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை மாணவியின் பெற்றோர் முத்தையா–பார்வதி மற்றும் உறவினர்கள் அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தின் முன் குவிந்தனர். சக மாணவிகளும் வந்திருந்தனர்.

கதறி அழுத தாயார்
அப்போது மாணவி சண்முக பிரீத்தாவை நினைத்து அவரது தாயார் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ‘எனது மகள் சாகக்கூடியவள் அல்ல. அவளை கொன்றுவிட்டார்கள். என்ன நடந்தது என்பது தெரியவில்லை’, என்று கூறியபடியே கதறி அழுதார். இதுகுறித்து பார்வதி நிருபர்களிடம் கூறியதாவது:–

நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணிக்கு எனது மகள் எங்களுடன் செல்போனில் பேசினாள். குடியரசு தின விடுமுறைக்கு ஊருக்கு வருவதாகவும் கூறினாள். மிகவும் மகிழ்ச்சியாகத்தான் பேசினாள். கல்லூரியில் நடந்தவை பற்றி ஆர்வத்துடன் கூறினார். திடீரென்று இரவு 11 மணிக்கு எனது மகள் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக அவளுடைய தோழிகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். எங்கள் இதயம் சுக்குநூறாக உடைந்து விட்டது.

மர்மம்
உடனடியாக சென்னைக்கு கிளம்பி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்தோம். ஆனால் உடனடியாக எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கடுமையான போராட்டத்துக்கு பிறகு நானும், எனது கணவர் மற்றும் உறவினர்கள் உள்ளே சென்றோம். அங்கு எனது மகள் விழுந்ததாக சொல்லப்படும் இடத்தில் எந்தவித ரத்தக்கறையுமே காணப்படவில்லை. அந்த இடம் சுத்தமாக இருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தனது செல்போன் கீழே விழுந்து உடைந்து விட்டதாக என்னிடம் கூறி அவள் அழுதாள். நான் அப்போதே நினைத்தேன். ஏதாவது சண்டையில் செல்போன் உடைந்திருக்குமோ? என்று நான் சந்தேகப்பட்டேன். நிச்சயமாக எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. ஏதோ நடந்திருக்கிறது? எனது மகள் சாவு குறித்து ஏதேதோ பேசப்படுகிறது. என்னால் அதை தாங்கமுடியவில்லை.

சதி
இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறேன். ஆனால் இது தற்கொலை அல்ல. செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது, கவனம் சிதறி, கால் தவறி கீழே விழுந்திருக்கலாம் என்று போலீசார் எங்களிடம் தெரிவித்தனர். இந்த பதிலில் நிச்சயம் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனது மகள் நன்றாக படிக்கக்கூடியவள். பிளஸ்–2 பொதுத்தேர்வில் 1,144 மார்க் வாங்கியவளுக்கு, எப்படி கவனம் சிதறியிருக்க முடியும்?

எனது மகள் சாவு குறித்து அவளுடைய தோழிகள், எதையுமே பேச மறுக்கிறார்கள். எதையோ மறைக்கிறார்கள். ஏதோ நடந்துள்ளது. நிச்சயம் எனது மகள் தற்கொலை செய்திருக்க மாட்டாள். ஏதோ பிரச்சினை இதற்கு பின்னால் உள்ளது. விடுதி வார்டனுக்கு கூட தெரியாமல் எப்படி எனது மகளை அடையாறில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்க முடியும்? இதில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது. எனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் நேற்று பிறபகல் மாணவி சண்முக பிரீத்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘‘மாணவி சண்முக பிரீத்தா விடுதி கட்டிட மாடியில் நின்று செல்போனில் பேசியதாகவும், திடீரென்று சத்தம் கேட்டு அங்கு ஓடியபோது சண்முக பிரீத்தா காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார் என்று சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏதாவது சண்டை பிரச்சினை காரணமாக இருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? என்ற எல்லா கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

கல்லூரி முதல்வர் விளக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் நாராயணசாமி, ஏ.சி.டெக். கல்லூரி முதல்வர் சிவநேசன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் மாணவி சண்முக பிரீத்தா சாவு குறித்து கூறியதாவது:–

24–ந்தேதி இரவு 10.40 மணிக்கு மாணவி சண்முகப்பிரீத்தா நந்தியா விடுதியில் 2–வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதை விடுதி ஆலோசகர் மற்றும் துணை வார்டன் ஆகியோர் தெரிவித்தனர். பிறகு அந்த மாணவியை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆனால் அந்த மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

அந்த மாணவி நன்றாக படிக்கக்கூடியவர். இதுவரை மதிப்பெண் 10–க்கு 7.8 வைத்திருக்கிறார். மாணவி விழுந்த மாடியில் கைப்பிடி சுவர் 3½ அடி உயரம் கட்டப்பட்டு இருந்தது. அவர் 25–ந்தேதி இரவு விடுமுறையில் வீட்டுக்கு செல்வதற்காக விடுதியில் அனுமதி பெற்றுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்



Tks

www.dailythanthi.com

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் திருத்துறைப்பூண்டி வீரர் தங்கம் வென்றார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் திருத்துறைப்பூண்டி வீரர் தங்கம் வென்றார்.

 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வேலூரைச் சேரந்தவர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவரும், குத்துச் சண்டை வீரருமான விக்னேஷ் (20).

இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் சாய் பாக்ஸர் அசோசியேஷன் மூலம் நடைபெற்ற 20 வயதுக்குள்பட்ட 62 முதல் 70 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்றார்.

இதில் விக்னேஷ் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர் மார்ச் மாதம் தாய்லாந்தில்  நடைபெறவுள்ள அகில உலக குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

 தங்கம் வென்ற விக்னேஷ் திருத்துறைப்பூண்டிக்கு சனிக்கிழமை வந்த போது, அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் கராத்தே தியாகராஜனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அப்போது அவரிடம் தாம் தாய்லாந்துக்குச்  செல்ல உதவுமாறு கேட்டுக்கொண்டதையடுத்து அவருக்கு விமானப் பயணச்சீட்டு எடுத்துத் தருவதாக கூறினார் தியாகராஜன்.

சனி, 16 ஜனவரி, 2016

" நான் கடைசி வரை இந்தியாவின் சுதந்திரத்துக்காகவே போராடினேன்.- நேதாஜி " ====கர்னல் ஹபீபூர் ரஹ்மான்கான் எழுதிய கடிதம்===


இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத் தகவலை பிரிட்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து நேதாஜியுடன் பயணித்த மற்றொரு இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த தகவல்களையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேதாஜியின் உடலை எரித்த பின்னர் அவர் எழுதி கடிதம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கர்னல் ஹபீபூர் ரஹ்மான்கான், இந்திய தேசிய ராணுவம், தைஹோகூவில் நடந்த விமான விபத்து தொடர்பாக எழுதிக் கொள்வது, ” கடந்த 16-8-1945ஆம் ஆண்டு காலை 10.30 மணியளவில் ஜப்பானை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.

சுபாஷ் சந்திர போஸ், சில அரசாங்கள் உத்தியோகஸ்தர்கள், இவர்களுடன் நானும் அந்த குழுவில் இருந்தேன். முதல் கட்டமாக சிங்கப்பூரில் இருந்து பாங்காங் நோக்கி ஜப்பானிய பாம்பர் விமானத்தில் பயணித்தோம்.

மதியம் 3.30 மணியளவில் பாங்காங் சென்றடைந்தோம். பின்னர் 17ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பாங்காங்கில் எங்களுக்காக இரு ஜப்பான் விமானங்கள் காத்திருந்தன.

ஒன்று இந்தியர்களுக்கு. நேதாஜி ,ஸ்ரீ ஐயர், கர்னல் கேலோனல் குல்ஷார் சிங், கர்னல் தீப்நாத் தாஸ், லெப்டினன்ட் கர்னல் பிரீதம் சிங், மேஜர் ஏ.ஹசன் மற்றும் நான் உள்ளடக்கிய 7 பேருக்கும் ஒரு விமானம்.

இந்திய சுதேசிய அரசுடன் ராணுவ நிர்வாகங்களை கவனிக்கும் ஜப்பானிய லெப்டினன்ட் ஜெனரல் இசோடா, சுதேசிய அரசுடன் அரசியல் விவகாரங்களுக்கான ஜப்பான் அமைச்சர் ஹெச். ஈ. ஹாட்சியா, ஆகியோர் மற்றொரு விமானத்தில் பயணித்தனர்.

அதே தினத்தில் காலை 10.45 மணிக்கு வியட்நாமில் உள்ள சைகூன் (தற்போது ஹோசிமின் ) போய் சேர்ந்தோம். அன்று மாலை லெப்டினன்ட் ஜெனரல் இசோடா, ஹாட்சியா, கர்னல் தாடா, நேதாஜிக்கு ஒரு தகவல் அளித்தனர். அதாவது ஜப்பான் புறப்படும் விமானத்தில் இரு இருக்கைகள் எஞ்சியிருக்கின்றன.

ஜப்பானுக்கு புறப்படத் தயாராகுங்கள் என்று கூறப்பட்டது. விமானத்தில் இருக்கைகள் இல்லாத நிலையில் எங்களுடன் வந்த சுதேசிய ராணுவ அதிகாரிகள் அங்கேயே தங்கி விட்டனர்.

நேதாஜி என்னை மட்டும் உடன் அழைத்துக் கொண்டார். சைகூனில் இருந்து மாலை5.15 மணியளவில் அந்த இரட்டை என்ஜீன் கொண்ட மிட்சுபிசி கே.ஐ- 21 ரக ஜப்பானிய பாம்பர் விமானம் புறப்பட்டது.

இரவு 7.45 மணிக்கு பிரெஞ்சு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த தரோன் நகரில் ( வியட்நாமில் உள்ள டா நாங் என்ற கடற்கரை நகரம் ) விமானம் தரை இறங்கியது.

அன்றைய இரவு அங்கேயே கழித்தோம். அடுத்த நாள் காலை அதாவது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை எங்கள் விமானம், தைவானில் உள்ள தைஹோகூ (தற்போது தைபே) நோக்கி பயணத்தை தொடங்கியது.

மதியம் 2 மணிக்கு அங்கு சென்றடைந்தோம். சுமார் 35 நிமிடங்கள் ஓய்வெடுத்தோம்.

தொடர்ந்து 2.35 மணிக்கு ஜப்பானை நோக்கி விமானம் புறப்படத் தொடங்கியது.

தைஹோகூ ஏரோ டிராமை விட்டு விமானம் மேலெழும்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானத்தின் முன் பகுதியில் இருந்து குண்டு வெடித்தது போல பெரும் சத்தம் கேட்டது.

விமான என்ஜீனில் உள்ள இறக்கை ஒன்று உடைந்து தொங்கியதால் ஏற்பட்ட சத்தம் அது. அடுத்த நிமிடமே தரையை நோக்கி விமானம் பாய்ந்தது. விமானம் தரையில் மோதியவுடன் முன்பக்கம் பின்புறமும் தீ பற்றத் தொடங்கியது.

விமானத்தில் நேதாஜி பெட்ரோல் டேங் அருகில் இருந்தார். நான் அவருக்கு அருகில் இருந்தேன்.

விமானத்தில் பற்றி எரிந்த தீக்கிடையே நாங்கள் வெளியேறினோம். முதலில் நான் வெளியே வந்தேன். எனக்கு பின்னால் நேதாஜி வந்தார்.

விமானத்தை விட்டு வெளியே வந்த நான் திரும்பி பார்த்த போது, நேதாஜியின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததை பார்த்தேன். நான் அவரது உதவிக்கு ஓடினேன். அவரது உடைகளை கழற்றினேன்.

ஆனால் அவருக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. விமானம் கீழே விழுந்ததில் நேதாஜிக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

விமானம் தரையில் விழுந்த நேரத்தில் பெட்ரோல் டேங் வெடித்து அதில் இருந்த பெட்ரோல் நேதாஜி மீது சிதறியிருக்கலாம் என்பது என் கணிப்பு.

இதனால்தான் அவர் மீது தீ இலகுவாக பரவியிருக்கலாம் என்று கருதுகிறேன். எனினும் அருகில் இருந்த ஜப்பானிய மருத்துவமனைக்கு 15 நிமிடத்துக்குள் நேதாஜியை கொண்டு போய் விட்டோம்.

எனக்கும் உடல் எங்கும் தீக்காயங்கள், தலையில் பலத்த அடி பட்டிருந்தது. நேதாஜியை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தோம். மருத்துவர்கள் தீவிரமாக போராடி பார்த்தனர்.

ஆனால் அன்று இரவு 9 மணியளவில் நேதாஜி மரணம் அடைந்து விட்டார். நேதாஜி இறப்பதற்கு முன்னால் மிகுந்த அமைதியுடன் இருந்தார்.

என்னிடம் பேசினால் கூட இந்திய சுதந்திரம் பற்றிதான் அவரது பேச்சு இருந்தது. தான் இறக்கும் தருவாயில் இந்தியாவின் சுதந்திரத்தை பற்றிதான் பேசிக்கொண்டுதான் இறந்ததாக தனது சகத் தோழர்களிடமும் அறிவிக்கச் சொன்னார்.

” நான் கடைசி வரை இந்தியாவின் சுதந்திரத்துக்காகவே போராடினேன்.

எனது இறப்பும் அதே முயற்சிக்காகவே நிகழ்ந்துள்ளது. தோழர்களே கடைசி வரை போராட்டத்தை கைவிட்டு விடாதீர்கள் ”என்பதே நேதாஜி இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அளித்த இறப்பு செய்தி. இந்த விபத்தில் லெப்டினன்ட் ஷிடாய், மற்றும் இரு ஜப்பானிய காமெண்டர்களும் இறந்து போனார்கள்.

மற்றவர்கள் எல்லாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. நேதாஜி இறந்ததும் அவரது உடலை டோக்கியோவுக்கு அல்லது சிங்கப்பூருக்கோ கொண்டு செல்ல வேண்டுமென்று நான் வலியுறுத்தினேன்.

சிங்கப்பூர் கொண்டு செல்ல வேண்டுமென்பதே எனது நோக்கமாக இருந்தது. தேவையான உதவிகள் செய்யப்படுவதாக வாக்களிக்கப்பட்டது.

விரைவில் சவப் பெட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் விபத்து குறித்து சைகூன் மற்றும் டோக்கியோவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் கூறப்பட்டது.

நேதாஜி இறந்த 3 நாட்களுக்கு பிறகு, அதாவது 21ஆம் தேதி அவரது உடலை எடுத்து செல்வது சாத்தியமில்லை. எனவே அவரது உடலை தைஹோகூவிலேயே எரித்து விடுமாறு என்னிடம் தகவல் தரப்பட்டது. எனக்கும் வேறு வழி தெரியவில்லை.

நானும் அதனை ஏற்றுக்கொண்டேன். தொடர்ந்து 22ஆம் தேதி நேதாஜியின் உடலை ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் உதவியுடன் எரித்தேன். பின்னர் 23ஆம் தேதி நேதாஜியின் சாம்பலை சேகரித்தேன்.

நேதாஜியின் அஸ்தியை டோக்கியோவில் ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, தக்க சமயத்தில் இந்தியா கொண்டு வரலாம் என்று எனக்கு அறிவுரை கூறப்பட்டது.

எதிர்பாராமல் நடந்த விபத்தின் உண்மை நிலவரம் இதுதான். நான் ஜப்பானிய அதிகாரிகளிடம் நேதாஜியின் அஸ்தியை பத்திரப்படுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அப்போதுதான் என் தேசத்தின் தன்னிகரற்ற தலைவனை ஒரு உண்மையான ஹீரேவை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும்.”

இப்படிக்கு,
கர்னல் .ஹபீபூர் ரஹ்மான்கான்
தைஹோகூ, தைவான்
24-8- 1945

=TKS=
Puthinamnews

புதன், 13 ஜனவரி, 2016

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை மயானத்துக்கு செல்வது குறித்த நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை மயானத்துக்கு செல்வது குறித்த நடவடிக்கையில் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து, திருவாரூரில் மாற்றத்துக்கான மக்கள் களத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள   திருநாள்கொண்டசேரியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் உயிரிழந்ததையடுத்து,  இவரது சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்ய வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், செல்லமுத்துவின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

பொதுப் பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நாகை மாவட்ட நிர்வாகம் செல்லமுத்துவின் சடலத்தை வேறு பாதை அமைத்து எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்லமுத்துவின் குடும்பத்தினரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் அமைத்தப் பொதுப் பாதையில் காவல்துறையினர் செல்லமுத்துவின் சடலத்தை எடுத்துச் சென்று இறுதிச் சடங்கை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை மாற்றத்துக்கான மக்கள் களம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இயக்க நிர்வாகி கோ. வரதராஜன் தலைமை வகித்தார்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சவுந்தரராஜன், பாரதி மக்கள் மன்ற நிர்வாகி சுபாஷ்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


TKS

Dinathanthi News Paper 

செவ்வாய், 12 ஜனவரி, 2016

உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் நாடுகள் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா (India world’s 7th most valuable Nation Brands )

increditable india
    உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் நாடுகளின் பட்டியலை (‘The World’s Most Valuable Nation Brands’) உலகின் மிகப்பெரிய பிராண்ட் மதிப்பீட்டு நிறுவனமான ‘Brand Finance’ (‘பிராண்ட் பைனான்ஸ்’)  நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 7-வது இடத்தை பிடித்துள்ளது (India world’s 7th most valuable ‘Nation Brand).
    Brand Finance’ (‘பிராண்ட் பைனான்ஸ்’)  நிறுவனம் உலகின் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பலம் (strength), மதிப்பு (value), அடுத்த ஐந்து வருடங்கள் விற்பனையின் கணிப்பு (Five year forecasts of sales of all brands in each nation) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (The Gross domestic product (GDP)) உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் நாடுகளின் பட்டியலை (The World’s Most Valuable Nation Brands) தயாரிக்கிறது.
    இந்த பட்டியலில் இந்தியா 7-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் பிராண்ட் மதிப்பு 32 சதவீதம் அதிகரித்து 2.1 பில்லியனாக டாலராக உள்ளது. கடந்த ஆண்டு  8-வது இடத்தில் இந்தியா இருந்தது.
    இந்த பட்டியலில் அமெரிக்கா 19.7 பில்லியன் டாலருடன் முதலிடத்திலும், 2-வது இடத்தில் சீனாவும், 3வது மற்றும் 4-வது இடத்தில் ஜெர்மனியும், இங்கிலாந்தும், 5-வது இடத்தில் ஜப்பானும் , 6-வது இடத்தில் பிரான்சும் உள்ளது .
     இந்தியாவில் ‘Incredible India’ என்னும் பிரச்சார கோஷம் (slogan) நன்றாக வேலை செய்திருப்பதாக Brand Finance’ (‘பிராண்ட் பைனான்ஸ்’)  நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) பிரச்சினையால் ஜெர்மனி சரிவு கண்டிருக்கிறது. அந்த நாடு தொடர்ந்து 3-வது இடத்தில் இருந்தாலும் பிராண்ட்களின் மதிப்பு 4 சதவீதம் சரிந்திருக்கிறது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க 20 பிராண்ட் நாடுகளின் பட்டியல் (Top 20 most valuable  Nation Brands)

VALUABLE NATION BRAND
COURTESY : TWITTER

உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)


COURTESY :INTERBRAND
COURTESY :INTERBRAND
      பிராண்ட் மேலாண்மை நிறுவனமான (Brand Management Firm)  INTERBRAND நிறுவனம் 2015-ஆம் ஆண்டின்  உலகின் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் பட்டியலை (Most valuable brands in the world) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 100 பிராண்டுகளை தேர்வுசெய்துள்ளது.
      இந்த பட்டியலை நிறுவன பிராண்டுகளின் நிதி செயல்திறன் (The financial performance of the branded),  வாடிக்கையாளர் கள் பிராண்டுகளை  தேர்வு  செய்வதற்கு அது செலுத்தும் செல்வாக்கு (The role the brand plays in influencing consumer choice), பிராண்டின் உயர் விலை மதிப்பில் அது செலுத்தும் ஆதிக்கம் (the strength the brand has to command a premium price) மற்றும் நிறுவனம் ஈட்டும் பாதுகாப்பான வருவாய் (secure earnings for the company)  போன்ற அடிப்படையில் பிராண்டுகளை தேர்வு செய்துள்ளது. APPLE பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.  GOOGLE பிராண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

20. LOUIS VUITTON

Reuters/uk
Reuters/uk
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $22.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 19
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $22.6 billion


19. HONDA

COURTESY : REUTERS
COURTESY : REUTERS
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 20
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $21.7 billion


18. HP

HP
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23.05 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 17
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $23.8 billion


17. NIKE

COURTESY: REUTERS
COURTESY: REUTERS
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23.1 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 22
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $19.9 billion


16. ORACLE

COURTESY: REUTERS
COURTESY: REUTERS
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $27.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 16
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $26 billion



15. CISCO

cisco
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $29.9 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 14
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $30.9 billion



14. Intel

intel
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $35.4 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 12
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $34.6 billion


13. Disney

disney
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $36.5 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 13
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $32.2 billion


12. Mercedes-Benz

Mercedes-Benz
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $36.7 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 10
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $34.3 billion


11. BMW

BMW
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $37.2 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 11
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $34.2 billion



10. Amazon

COURTESY: AP PHOTO
COURTESY: AP PHOTO
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $37.9 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 15
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $29.5 billion


9. McDonald’s

McDonald's
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $39.8 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 9
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $42.6 billion


8. GE

8-ge
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $42.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 6
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $45.5 billion


7. Samsung

SAMSUNG
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $45.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 7
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $45.4 billion


6. Toyota

TOYATO
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $49 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 8
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $42.4 billion

5. IBM

COURTESY : REUTERS
COURTESY : REUTERS
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $65.1 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 4
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $72.2 billion


4. Microsoft

MICROSOFT
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $67.7 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 5
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $61.6 billion

3. Coca-Cola

COCA-COLA
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $78.4 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 3
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $81.6 billion

2. Google

COURTESY:REUTERS
COURTESY:REUTERS
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $120.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 2
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $107.4 billion

1. Apple

courtesy:reuters
courtesy:reuters
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $170.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 1
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $118.9 billion

திங்கள், 11 ஜனவரி, 2016

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - அதிகாரி தகவல்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி கூறியுள்ளார்.

உதவித்தொகை

திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தவறியவர்களுக்கு மாதம் ரூ.100-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.200-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 10-ம் வகுப்பு வரை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.300-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.375-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.450-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

விதிமுறைகள்

இந்த உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலை வாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல் கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

தகுதி உடையவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களுடன் அடுத்த மாதம் (பிப்ரவரி) 29-ந் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka