தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை மயானத்துக்கு செல்வது குறித்த நடவடிக்கையில் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து, திருவாரூரில் மாற்றத்துக்கான மக்கள் களத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள திருநாள்கொண்டசேரியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் உயிரிழந்ததையடுத்து, இவரது சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்ய வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், செல்லமுத்துவின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
பொதுப் பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நாகை மாவட்ட நிர்வாகம் செல்லமுத்துவின் சடலத்தை வேறு பாதை அமைத்து எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்லமுத்துவின் குடும்பத்தினரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் அமைத்தப் பொதுப் பாதையில் காவல்துறையினர் செல்லமுத்துவின் சடலத்தை எடுத்துச் சென்று இறுதிச் சடங்கை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை மாற்றத்துக்கான மக்கள் களம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு இயக்க நிர்வாகி கோ. வரதராஜன் தலைமை வகித்தார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சவுந்தரராஜன், பாரதி மக்கள் மன்ற நிர்வாகி சுபாஷ்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
TKS
Dinathanthi News Paper

0 கருத்துகள்:
கருத்துரையிடுக