ஞாயிறு, 17 ஜனவரி, 2016

மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் திருத்துறைப்பூண்டி வீரர் தங்கம் வென்றார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் திருத்துறைப்பூண்டி வீரர் தங்கம் வென்றார்.

 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வேலூரைச் சேரந்தவர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவரும், குத்துச் சண்டை வீரருமான விக்னேஷ் (20).

இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் சாய் பாக்ஸர் அசோசியேஷன் மூலம் நடைபெற்ற 20 வயதுக்குள்பட்ட 62 முதல் 70 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்றார்.

இதில் விக்னேஷ் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர் மார்ச் மாதம் தாய்லாந்தில்  நடைபெறவுள்ள அகில உலக குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

 தங்கம் வென்ற விக்னேஷ் திருத்துறைப்பூண்டிக்கு சனிக்கிழமை வந்த போது, அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் கராத்தே தியாகராஜனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அப்போது அவரிடம் தாம் தாய்லாந்துக்குச்  செல்ல உதவுமாறு கேட்டுக்கொண்டதையடுத்து அவருக்கு விமானப் பயணச்சீட்டு எடுத்துத் தருவதாக கூறினார் தியாகராஜன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka