வியாழன், 24 மார்ச், 2016

முதல் மனைவிக்கு தெரியாமல் 2–வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி கரும்பியூர் ராஜன்கட்டளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன்–பிரேமா தம்பதியின் மகள் அகிலா(வயது26). திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி தோப்படி தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் தசரதசக்கரவர்த்தி(29). அகிலாவும், தசரத சக்கரவர்த்தியும் காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் திருப்பூர் சென்று பல்லடம் அங்காளபரமேஸ்வரிஅம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்வதாக அகிலாவிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு தசரதசக்கரவர்த்தி ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தசரதசக்கரவர்த்திக்கும், வேறோரு பெண்ணுக்கும் வருகிற 25–ந் தேதி(வெள்ளிக்கிழமை) 2–வது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அகிலா ஊருக்கு வந்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.


பின்னர் அவர், கணவரின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்தக்கோரி நேற்று முன்தினம் தனது பெற்றோருடன் தசரத சக்கரவர்த்தி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏட்டுகள் கண்ணகி, அபிராமிசுந்தரி, மீனாட்சி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தசரதசக்கரவர்த்தியை கைது செய்தனர்

ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பள்ளி புத்தகங்கள் பறிமுதல்

Image result for tamil government school booksதிருத்துறைப்பூண்டி அருகே வேனில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விளக்கவுரை புத்தகங்களை பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் வாசுதேவன், சார்பு ஆய்வாளர் தர்மலிங்கம் அடங்கிய குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து வந்த வேனை மடக்கி சோதனை செய்ததில் அதில் பள்ளி மாணவர்களுக்கான 2,067 விளக்கவுரை புத்தகங்கள் இருந்தது.

ஆனால், ஓட்டுநரிடம் அதற்குரிய ஆவணங்கள் இல்லை. விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை கடலூர் மாவட்டங்களுக்கு கொண்டு வந்தது தெரிய

வந்தது.

இதையடுத்து புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் புத்தகங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்படடுள்ளது.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka