திருத்துறைப்பூண்டி அருகே வேனில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விளக்கவுரை புத்தகங்களை பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் வாசுதேவன், சார்பு ஆய்வாளர் தர்மலிங்கம் அடங்கிய குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து வந்த வேனை மடக்கி சோதனை செய்ததில் அதில் பள்ளி மாணவர்களுக்கான 2,067 விளக்கவுரை புத்தகங்கள் இருந்தது.
ஆனால், ஓட்டுநரிடம் அதற்குரிய ஆவணங்கள் இல்லை. விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை கடலூர் மாவட்டங்களுக்கு கொண்டு வந்தது தெரிய
வந்தது.
இதையடுத்து புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் புத்தகங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்படடுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக