சனி, 31 ஜனவரி, 2015

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 30 லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 30 லஞ்சம் வாங்குவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டுமென குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திப் பேசினர்.


திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

சேதுராமன் (குடவாசல்): கொரடாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2012 -2013 ஆம் ஆண்டு அரசு அறிவித்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். அறுவடை இயந்திரம் சம்பா பணிக்கு அதிகளவில் கொண்டுவரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே கூறியது. அது முழுமையான செயல்வடிவம் பெறவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைக்கு ரூ. 30 லஞ்சம் வாங்குவதைத் தடுக்க வேண்டும்.

வெ. சத்யநாராயணன் (டெல்டா விவசாயிகள் குழுமம்): நெல்பழம், புகையான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கிட்டு மாநில அரசு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் பயன்பெற்று வந்த, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்கிய தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தையே வரும் ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டும்.

பழனிவேல் (கோட்டூர்): சம்பாவில் பூ பூக்கும் தருணத்தில் மழை பெய்ததால் நிகழாண்டு மகசூல் குறைந்துள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசுத்துறை மூலம் குறைந்த வாடகையில் வைக்கோல் கட்டும் இயந்திர வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உழவு, டீசல் மானியம் வழங்க வேண்டும்.

மருதப்பன் (நீடாமங்கலம்): திருவாரூர் மாவட்டத்தில் கூடுதலாக மகசூல் விளைந்ததாக கணக்கு காண்பிக்க வெளிமாவட்டங்களிலிருந்து நெல் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும். கோடை சாகுபடிக்கு பற்றாக்குறையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.

சுந்தரமூர்த்தி (வலங்கைமான்): அறுவடைக் காலத்தில் திடீரென அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திறந்தவெளியில் கொட்டி வைத்திருக்கும் நெல்மூட்டைகளை பாதுகாக்க தார்ப்பாய் மற்றும் பாலித்தீன் பாய்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில் நிலவும் சாக்குத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தம்புசாமி (கொரடாச்சேரி): தனியார் கரும்பு ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு 2013-2014 ஆம் ஆண்டுக்குரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுடனான மாதக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

சந்திரசேகரன்: மழை மற்றும் பனிக்காலமாக உள்ளதால் நெல்கொள்முதல் நிலையங்கில் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

ச.வீ. ராமகிருஷ்ணன் (கங்களாஞ்சேரி): உளுந்து பயிருக்கு பயிர்க்காப்பீடு செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுப்பணித் துறையினர் முன்னுரிமை அடிப்படையில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

கூட்டத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் பேசியது: கூடுதல் அறுவடை இயந்திரம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதுப்புது வேளாண் கருவிகளை புகுத்தவும், அதை பழுதுபார்க்கவும், இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ஆ. அழகிரிசாமி, பொதுப்பணித்துறை பொறியாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெள்ளி, 30 ஜனவரி, 2015

திருவாரூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை


திருவாரூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன்.

பள்ளி, கல்லூரி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலாó முக்கண்ணன் மேற்பார்வையில்

வாகன ஆய்வாளாó ராஜேந்திரன் தலைமையில் அலுவலர்கள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகில் பள்ளி மாணவாóகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் உரிய தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட இரண்டு ஆட்டோ, ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலாó முக்கண்ணன் கூறியது:

பள்ளி, கல்லூரி வாகனங்கள் விதிமுறைகளை மீறக் கூடாது.

மீறினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே பள்ளி வாகனங்கள் ஆட்டோ, வேன்கள் அரசு விதித்துள்ள எண்ணிக்கையில் மாணவாóகள் ஏற்றி செல்ல வேண்டும் என்றார் அவர்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கோயிலில் தூய்மை பணி




திருத்துறைப்பூண்டி,:திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிறவி மருந்தீசர் கோயில் (பெரியகோயில்) மாணவர்கள் தூய்மை பணி செய்தனர். கல்லூரி முதல்வர் கௌதமன் தூய்மை பணியை துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் பாரததேவி தலைமையில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கோயில் வளாகம் முழுவதும் தூய்மை செய்தனர். விரிவுரையாளர் திலகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்






திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி அரசு மேனிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.  ரோட்டரி சங்கத் தலை வர் வக்கீல் ராஜாராமன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஷாகுல்ஹமீது மற்றும் ஆசிரியர் சண்முகவேலு முன்னிலை வகித்தனர். பொருளாளர் பெருமாள் வரவேற்றார். டிஎஸ்பி கண்ணதாசன் மாணவர்களுக்கு மரக் கன்று கள் வழங்கினார்.மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவ மாணவிகளுக்கு  ஊக்கப்பரிசு வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தவேலு, சந்திரன், எஸ்ஐ சரவணன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் அப்துல்ரஹ்மான், திலகமணி, ஜான், சதீஸ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேசிய பசுமைப்படை ஆசிரியர் பயிற்றுநர் குமணன் நன்றி கூறினார்.

திருத்துறைப்பூண்டி மாணவர்கள் வெண்கல பதக்கம் வென்றனர்.




திருத்துறைப்பூண்டி,:மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் திருத்துறைப்பூண்டி மாணவர்கள் வெண்கல பதக்கம் பெற்றனர்.
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பள்ளங்கோயில் புனித ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் வெண்கலப் பதக்கம் பெற்றனர். மாநில முதன்மை உடற்கல்வி அலுவலர் கலைச்செல்வன், மாவட்ட உடற்கல்வி அலுவலர் கணேசன், மாநில குத்துச்சண்டை போட்டி நடுவர் சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் நியூட்டன், உடற்கல்வி ஆசிரியை மெட்டில்டா ஆகியோர் மாணவர்களை  பாராட்டினர்.

பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை


பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுரை வழங்கி உள்ளார். அந்த கடிதம் விவரம் வருமாறு:-
பள்ளிகள் சுத்தம்

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்களது பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தேங்கியிருக்கும் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து சுற்றப்புறம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலரால் கள ஆய்வு மேற்கொண்டு பிப்ரவரி 6-ந்தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கவேண்டும்.

தொடர் காய்ச்சல்

மாணவ-மாணவிகள் தொடர்ந்து காய்ச்சலில் இருந்தாலோ அல்லது இது போன்ற கிருமிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தையோ அல்லது அரசு மருத்துவமனையையோ தொடர்பு கொண்டு சிகிச்சை பெறுதல் வேண்டும்.
இது குறித்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் விழிப்புடன் செயல்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படின் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட சுகாதார ஆய்வு அலுவலருடன் தொடர்பு கொண்டு உடனடி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடல் வேண்டும். இது போன்ற நோய்கிருமிகள் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தல் வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள்

தண்ணீர் தேங்குவதாலும் சுகாதாரமற்ற குடிநீரை உபயோகப்படுத்துவதாலும் ஏற்படக்கூடிய டெங்கு பிற வைரஸ் காய்ச்சல், மஞ்சள்காமாலை போன்ற நோய்களின் தாக்குதலை தவிர்க்க பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.

1. அனைத்து பள்ளி வளாகத்திலும் எந்த இடத்திலும் நீர்தேங்காதவாறும், நீர்த்தேக்கப் பள்ளங்கள் இல்லாதவாறும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

2.பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி, கழிவு நீர் தொட்டிகள் அனைத்தும் திறந்த நிலையில் இல்லாதவாறு அவற்றை மூடி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கால்வாய்

2. பள்ளி வளாகத்தினுள் உள்ள கழிவறைகளை அவ்வப்போது சுத்தம் செய்து மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படவேண்டும்.

4. குடிநீர் குழாய்களை மாணவர்கள் பயன்படுத்துவதன் மூலம் வெளிப்படும் உபரி நீர் தேங்காதவாறு கால்வாய்கள் அமைத்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

டெங்கு குறித்து விழிப்புணர்வு

5. அவ்வப்போது வகுப்பாசிரியர்கள் மூலம் டெங்கு குறித்தான விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.

6. கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்கள் பரவுவது குறித்தும், இவற்றிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வை மாணவ மாணவிகளிடம் ஏற்படுத்தவேண்டும். இறைவணக்கத்தின்போதும், வகுப்புகளிலும் மாணவர்களுக்கு இதுகுறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

7. பள்ளி வளாகங்களில் உள்ளரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

8. பள்ளி வளாகத்திற்கு அருகாமையில் (வெளிப்பகுதியில்) சிறு பள்ளங்கள், பயன்படுத்தப்படாத கிணறுகள் இருப்பின் அவற்றில் நீர் தேங்குவதன் மூலம் அவற்றிலிருந்து நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. எனவே, அவ்விடங்களை பற்றிய விவரங்கள் அருகாமையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தெரிவித்து அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும்.
மஞ்சள்காமாலை

9. டெங்கு காய்ச்சல் தவிர மஞ்சள் காமாலை மற்றும் சுகாதாரமற்ற குடிநீரினால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

10. பள்ளிகளில் சுகாதாரம் குறித்தும், தொற்றுநோய்கள் குறித்தும் பலகைகள் மற்றும் பதாகைகள் வைத்திடுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்.

11. நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி நோய்க்கான அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்துதல் வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka