அடிமைமுறை ஒழித்து... அடக்குமுறை தகர்த்து... அடிமட்ட மக்களுக்கு அரிச்சுவடி சொன்ன. அருமை தோழர். ஜீவா அவர்கள் .
காரைக்குடி அருகேயுள்ள சிராவயல் கிராமத்தை சேர்ந்த இலக்கிய பேராசான் ப. ஜீவானந்தம் 13 வயதில் சுதந்திர போராட்டத்திற்கும் சமூக விடுதலைக்கும் போராடியவர். தமிழ்நாடு கலை இலக் கிய பெருமன்றம் ஆண்டுதோறும் இவரது நினைவு தினத்தை கொண்டாடி வரு கிறது. இதைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி தெற்குவீதியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் 52வது நினைவு தின கருத்தரங்கம் நடைபெற்றது. தலைவர் கலைமகள் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட தலை வர் கவிஞர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் நேரு வரவேற் றார். மாநில பொதுச்செயலாளர் முனைவர் காமராசு வாழ்த்துரை வழங்கினார். திரைப்பட இயக்குநர் ஜீவாபாரதி சிறப்புரையாற்றினார். பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்
வாழ்க்கைக் குறிப்பு
நாகர்கோவில் அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மா காந்தியின் கொள்கைகள். அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை காந்தியையும், கதரையும் பற்றியது.பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். காந்திய வெளியீடுகளைப் படித்தார்.ஜீவானந்தம், அரசியலில் எதிரணியில் இருந்த காமரஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இந்திய சுதந்திரத்திற்குப் பிற்காலங்களில் உடுத்த மாற்றுடை இல்லாத வறுமை நிலையிலும் வாழ்ந்தவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக