திருத்துறைப்பூண்டி,: மாணவர்கள் சாலை விதிமுறைகளை அறிந்து மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் டிஎஸ்பி அறிவுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம், காவல்துறை, பள்ளி என்எஸ்எஸ் திட்டம் சார்பில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் வக்கீல் ராஜாராம் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர்கள் சண்முகவேலு, சாகுல் ஹமீது, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் அப்துல் ரஹ்மான், திலகமணி, சதீஸ்குமார், ஜான், தலைவர் தேர்வு செந்தில்குமார், மற்றும் துரைராயப்பன், சேவை திட்ட சேர்மன் பொறியாளர் பாலசுப்பிரமணியன், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் குமணன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பெருமாள் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி கண்ணதாசன் பேசுகையில்;
புதுக்கோட்டையில் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனுடன் நான் ஒன்றாக படித்தேன். உங்களைப் பார்க்கும் போது எனது மாணவ பருவம் நினைவுக்கு வருகிறது. மாணவராகிய நீங்கள் சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன், மாலை நேரங்களில் ஒரு மணிநேரமாவது விளையாட வேண்டும் என்றார்.
இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு பேசுகையில்: வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் மற்றவர்களுக்கு எடுத்து கூறவேண்டும் என்றார். போக்குவரத்து ஆய்வாளர் சந்திரன் பேசுகையில்: செல்போனில் பேசிக்கொண்டும், மது அருந்தியும் வாகனங்கள் ஓட்டகூடாது. ஹெல்மெட் அணிந்து ஓட்டவேண்டும். இருசக்கர வாகனத்தில் 2 பேர் தான் செல்லவேண்டும். என்றார். விழாவில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. எஸ்ஐ சரவணன், ரோட்டரி சங்க நிர்வாகிகள், ஆசிரியர் ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சாலை பாதுகாப்பு சேர்மன் மகேஷ் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக