திருத்துறைப்பூண்டி,: திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற் றது. சங்க மாவட்ட செயலா ளர் சேகர் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். மாவட்ட ஆலோசகர் சதா சிவம் பேசினார். திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறளானிகள் நல அலுவலர் ரவீந்திரன் பயனாளிகளின் நலவசதி மானியங்களை பெற்றுக் கொண்டு மரக்கன்றுகள் நட்டார். ஜேசீஸ் சங்க தலைவர் சிவசைலம், பாரத மாதா தொண்டு நிறுவனர் மணி மாறன், டாக்டர் சகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார்," கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தருநிழலே' என இயற்கையை இறைவனது சொரூபமாக வர்ணிக்கிறார். காடு வளர்த்தால், இறைவனை வணங்குதல், தருமம் செய்தல் ஆகிய மூன்று கடமைகளுள் மரம் வளர்த்தல் மனிதனின் தலையாய கயமை என்கிறார் திருமூலர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக