வியாழன், 8 ஜனவரி, 2015

திருவாரூர் -காரைக்குடி அகல ரயில்பாதை திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்

திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அக்கட்சியின் 21-வது திருவாரூர் மாவட்ட மாநாடு, திருத்துறைப்பூண்டியில் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாள்கள் நடைபெற்றது.

மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஐ.வி. நாகராஜன் வேலை அறிக்கைப் படித்தார். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாகத் தடுக்க வேண்டும். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன மற்றும் உயர் சிகிச்சைகளை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை மாவட்ட ஆட்சியரக தனிக் கட்டடத்தில் அமைக்க வேண்டும். திருவாரூர் ரயில் நிலையத்தை மாதிரி ரயில் நிலையமாக மாற்ற வேண்டும். முத்துப்பேட்டையில் மீன்பிடி சிறு துறைமுகம் அமைக்க வேண்டும். முத்துப்பேட்டை தர்கா சுற்றுச்சுவர் இடிப்புக்குக் காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka