நுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு
ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல்
தொடர்பான பிரச்னை இருக்கும்.
இது
ஒவ்வொருவரின் எதிர்பாற்றலை பொறுத்து மாறுப்படும். மூன்றே நாளில் உங்களின்
நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். இதோ, அதற்கான வழிகள்…
* சுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு
வரும்போது முதலில் பால் பொருட்கள் அனைத்தையும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
* முதல்
நாளுக்கு முன் இரவு தூங்க செல்லும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும். இது உடலிருக்கும் நச்சுக்களை
வெளியேற்ற உதவும்.
* முதல் நாள், காலை உணவுக்கு முன்பு 300 மில்லி நீரில் 2 எலுமிச்சை பழத்தை பிழிந்து
குடிக்கலாம்.
* இரண்டாம் நாள், காலை வேளையில் அன்னாசி பழ சாறை
அருந்தலாம்.
* மூன்றாம் நாள், காலை உணவுக்கும் மதிய உணவுக்கும்
இடையில் 300 மில்லி
கேரட் ஜூஸை குடிக்கலாம்.
* உண்ணும் உணவில் அதிகமான
பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடலிலிருக்கும் நச்சுக்கள்
வெளியேறும். மூலிகை டீ குடிப்பதால் நுரையீரலில் எந்த தொற்றும் ஏற்படாமல்
பாதுகாக்கும்.
* தினமும் 20 நிமிடங்கள் குளிப்பதால்
உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறும். வியர்வையின் மூலமாக நச்சுக்களும்
வெளிவரும். காலை மற்றும் மாலை என குளிப்பதை 10 நிமிடங்களாக பிரித்துக்
கொள்ளலாம்.
* 5 துளி யூக்கலிப்டஸ் தைலத்தை நீரில்
விட்டும் குளிக்கலாம். வாரம் ஒருமுறை யூக்கலிப்டஸ் தைலத்தை 2 நிமிடங்கள் வரை சுவாசிக்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக