திங்கள், 19 ஜனவரி, 2015

பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் அப்படிப்பட்ட பாம்பு பூங்கா இந்தியாவில் பிரபலமான 5 இடங்களில் உள்ளது!






இந்தியாவில் காணப்படும் 270 வகை பாம்பு இனங்களில் 60 வகை பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை.


இவற்றில் பாம்புகளின் அரசனாக கருதப்படும் ராஜநாகம் மிகவும் அழகான மற்றும் மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பாகும். இதைத் தவிர சுருட்டைப் பாம்பு, நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன் ஆகிய 4 வகை பாம்புகளும் கொடிய விஷத்தன்மை உடைய பாம்புகளாக அறியப்படுகின்றன. இவற்றோடு இந்தியன் பைத்தான் என்ற மலைப்பாம்பு உலகில் காணக்கூடிய மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

பரிஷினக்கடவு ஸ்நேக் பார்க்



கேரளாவின் மிகப்பெரிய பாம்புப் பூங்காவாக கருதப்படும் பரிஷினக்கடவு ஸ்நேக் பார்க் கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள பரிஷினக்கடவு எனும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு ராஜநாகம், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், மலைப்பாம்பு, குழி விரியன் போன்ற பாம்பு வகைகளை காணலாம். இவற்றோடு விலங்குகள், பறவைகள், ஊர்வன வகைகளும் இந்தப் பூங்காவில் காணப்படுகின்றன. 150 வகையான ஊர்வன ஜந்துக்கள் இங்குள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் பாம்புகள் குறித்து மக்களுக்கு இருக்கும் பயத்தையும், மூடநம்பிக்கையையும் போக்குவதற்காக இங்கு சில காட்சி விளக்கங்களும் பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்படுகின்றன.


இவற்றோடு விலங்குகள், பறவைகள், ஊர்வன வகைகளும், இந்தப் பூங்காவில் காணப்படுகின்றன. 150 வகையான ஊர்வன ஜந்துகள் இங்குள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் பாம்புகள் குறித்து மக்களுக்கு இருக்கும் பயத்தையும், மூடநம்பிக்கையையும் போக்குவதற்காக இங்கு சில காட்சி விளக்கங்களும் பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்படுகின்றன.

காட்ராஜ் ஸ்நேக் பார்க்




காட்ராஜ் ஸ்நேக் பார்க் என்று பிரபலமாக அறியப்படும் ராஜீவ்காந்தி விலங்கியல் பூங்கா புனே அருகில் உள்ள காட்ராஜ் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இங்கு நீங்கள் கொடிய விஷமுள்ள எண்ணற்ற பாம்புகளை மிக அருகில் பார்த்து ரசிக்க முடியும். அதோடு முதலை, மானிட்டர் லிசார்ட் எனும் பெரிய பல்லி வகை, ஆமை போன்ற ஊர்வன வகைகளையும் இந்தப் பூங்காவில் காண முடியும்.

பன்னேர்கட்டா ஸ்நேக் பார்க்



கர்நாடகாவின் மிகப்பெரிய பாம்பு பூங்காவாக அறியப்படும் பன்னேர்கட்டா ஸ்நேக் பார்க் பெங்களூரிலிருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கொடிய விஷமுள்ள எண்ணற்ற பாம்பு வகைகளை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். அதோடு இந்தியாவின் சிறந்த வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாக கருதப்படும் பன்னேர்கட்டா தேசிய பூங்காவின் ஒரு அங்கமாக திகழ்ந்து வரும் பன்னேர்கட்டா ஸ்நேக் பார்க்குக்கு வரும் பயணிகள் அருகில் உள்ள இந்தியாவின் முதல் பட்டாம்பூச்சி பூங்காவான பன்னேர்கட்டா பட்டாம்பூச்சி பூங்காவுக்கும் சென்று வரலாம்.

கல்கத்தா ஸ்நேக் பார்க்

 
கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் கல்கத்தா ஸ்நேக் பார்க் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் கொடிய நஞ்சுள்ள பாம்புகளான இராஜநாகம், கண்ணாடி விரியன், கட்டுவிரியன், நல்ல பாம்பு போன்ற பாம்பு வகைகளையும், விஷமற்ற மற்ற பாம்புகளையும் காணலாம். இவை தவிர மஞ்சள் மானிட்டர் லிசார்ட் எனும் அறிய வகை இராட்சஸ பல்லி இங்கு இனப்பெருக்கம் செய்து வளர்க்கப்படுகின்றன. மேலும் ஆமை மற்றும் கடல் ஆமை, முதலை போன்ற ஊர்வன வகைகளையும், சில புலம்பெயர் பறவைகளையும் இங்கு நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

கிண்டி ஸ்நேக் பார்க்
















இந்தியாவின் மிகச்சிறிய தேசிய பூங்காவாக கருதப்படும் சென்னையின் கிண்டி தேசிய பூங்காவை அடுத்து கிண்டி ஸ்நேக் பார்க் அமையப்பெற்றுள்ளது. இங்கு நீங்கள் இராஜநாகம், பைத்தான், கண்ணாடி விரியன் உள்ளிட்ட கொடிய விஷமுள்ள பாம்புகளை காணலாம். இவற்றோடு இதர சில ஊர்வன வகைகளையும் கொண்டிருக்கும் இந்தப் பூங்கா இந்தியாவிலுள்ள ஸ்நேக் பார்க்குகளில் அழகான ஒன்றாக கருதப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka