மீத்தேன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவாரூரில் அண்மையில் நடைபெற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தஞ்சையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அது பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் மீத்தேன் திட்டத்துக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இனி ஆதரவு அளித்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.
விவசாயத்தை அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இத்திட்டத்துக்கு எந்த அரசியல் கட்சிகள் ஆதரவாக பேசினாலும் விவசாயிகள், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தவது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோ. வரதராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் மகேந்திரன், பிலால், ராஜா, வேதராஜ், அரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக