வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று மாணவ மாணவிகளுக்கு கற்றுத்தரும் பள்ளியிலேயே மரத்தை வெட்டி உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி வளாகத்தில் பழமை யான வேப்ப மரம் அனுமதியின்றி
வெட்டப்பட்டுள்ளது. இதுபற்றி கலெக்டர் விசாரிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதே வளாகத்தில் பெண்கள் பள்ளியில் தனியே இயங்குகிறது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த வேம்பமரம் இருந்தது. அந்த மரத்தை சிலர் யார் அனுமதி பெறாமலும் வெட்டி உள்ளனர்.
இடையூறாக இருந்தா லும், இல்லாவிட்டாலும் ஒரு மரத்தை வெட்டவேண்டுமானால் ஆர்டிஓவிடம் அனுமதி பெற்றுதான் வெட்ட வேண்டும். ஆனால் இங்கு எந்த அனுமதியும் பெறாமல் வெட்டப்பட்டுள்ளது. இது சர்ச் சையை ஏற்படுத்தியதால் வெட்டிய மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே கிடக்கிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழமை வாய்ந்த மரத்தை வெட்டி யது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
இதுகுறித்து பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென்பகுதியில் 40 வருட பழமையான தூங்க மூஞ்சி மரத்தின் கிளைகள் அருகில் உள்ள பெரியநாயகிபுரம் தெரு குடியிருப்பு வீடுகளுக்கு மேல் படந்துள்ளது. எப் போது வேண்டுமானாலும் முறிந்து வீடுகளுக்குமேல் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கலெக்டர், பள்ளி நிர்வாகம், பொதுப்பணித்துறைக்கு புகார் மனு அனுப்பிய பிறகு தற்போது கிளைகள் மட்டும் வெட்டப்பட்டுள்ளது. மரத்தை முழுமையாக அப்புறப்படுத்த ஆர்டிஓ அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் இதே வளாகத்தில் உள்ள அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியை ஓட்டி இருந்த 25 வருட பழமையான வேப்பமரத்தை யாருடைய அனுமதியும் பெறாமல் வெட்டி உள்ளனர். இதை மட்டும் எப்படி வெட்டியுள்ளனர் என்பது தெரியவில்லை. பாதிப்பு இல்லாத மரத்தை வெட்டி உள்ளனர். பாதிப்பை ஏற்படுத்தும் மரத்தை வெட்டவில்லை. அனுமதிபெறாமல் எதற்காக மரம் வெட்டப்பட்டது என்பது குறித்து கலெக்டர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
மர்மம் என்ன?
மழைக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் மரத்தை வளர்க்க வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. ஆனால் பள்ளி வளாகத்தில் எந்த காரணமும் இன்றி, இடையூறு இல்லாத ஒரு மரத்தை அனுமதியே பெறாமல் வெட்டியதன் மர்மம் புரியாத புதிராக உள்ளது. இதுபற்றி கலெக்டர் விசாரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்!
காடுகள் நாட்டின்
கண்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக