வெள்ளி, 9 ஜனவரி, 2015

திருவாரூர், நாகையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, திருவாரூர், நாகப்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சாலை ஆய்வாளர்கள், ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் 150 பேர் கைது...

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, திருவாரூர் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியலில் ஈடுபட்ட மாநில துணைத் தலைவர் புஷ்பநாதன் உள்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

நாகையில் ஆர்ப்பாட்டம், மறியல்: 100 பேர் கைது...

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்டத் தலைவர் எஸ். ஜோதிமணி, மாவட்டச் செயலர் ச. தியாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் எம். அரிகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன், மாநிலச் செயலர் அ. செüந்தரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka