மீத்தேன் வாயு திட்டத்தை முற்றிலுமாக கைவிடக் கோரி திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலத்துக்கு அடியில் உள்ள மீத்தேன் வாயுவை எடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் உணவு உற்பத்தி செய்யப்படும் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள திரு.வி.கா. கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் அதிகமானவர்கள் மீத்தேன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும், திட்டத்துக்கான ஒப்பந்தம் 2015 ஜன. 4-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. எனவே ஒப்பந்தத்தை தமிழக அரசு மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க கிளைத் தலைவர் செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக