செவ்வாய், 27 ஜனவரி, 2015

குடியரசு தினவிழாவில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன

திருவாரூர், :  திருவாரூரில் நடந்த குடியரசுதின விழாவில் 600
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கிய கலெக்டர் மதிவாணன் உலக சமாதானம் வேண்டி ஒரு ஜோடி வெண் புறாக்களை பறக்க விட்டார்.
திருவாரூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 66வது குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் மதிவாணன் தேசியகொடியை ஏற்றி வைத்து மாரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரி யாதையை  ஏற்றுக்கொண் டார். விழாவில் உலக சமாதானம் வேண்டி வெண்புறா ஜோடியினை கலெக்டர் மதிவாணன் பறக்க விட்டார். தொடர் ந்து சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது வாரிசுகள் 17 பேர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் சிறப்பாக பணிபுரிந்ததற்காக காவல் துறையை சேர்ந்த 47 பேர், அரசு துறையை சேர்ந்த 23 பேர் என மொத்தம் 140 பேர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 மேலும் வருவாய்த்துறையின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்கல்வி உதவித்தொகையாக 351 பயனாளிகளுக்கு ரூ7லட்ச த்து86 ஆயிரத்து250 மதிப்பிலான காசோலை, தாட்கோ மூலம் 12 பேர்களுக்கு வாகனம் வாங்குவதற்கு வங்கிக்கடன் மற்றும் மானிய தொகையாக ரூ 41லட்சத்து88ஆயிரத்து 772 மதிப்பிலான காசோலை, வேளாண் பொறியியல் துறை  சார்பில் பவர்டில்லர் கருவி வாங்க 14 பேர்களுக்கு ரூ.10லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான காசோலை, மன்னார்குடியை சேர்ந்த காவிரி ரங்கநாதன் உட்பட 3 பேருக்கு வேளாண்துறை சார்பில் சிறந்த விவசாயிக்கான தலா ரூ10 ஆயிரம் வீதம் ரூ30 ஆயிரத்திற்கான காசோலை என அரசின் பல்வேறு துறைகள் மூலம் மொத்தம் 600 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 50 ஆயிரத்து 184 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதிவாணன் வழங்கினார்.
 விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எஸ்பி ஜெயச்சந்திரன், டிஆர்ஒ மோகன் ராஜ், நுகர்பொருள் வாணிப கழக

முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, ஆர்டிஒக்கள் திருவாரூர் முத்துமீனாட்சி, மன்னார்குடி செல்வசுரபி, முதன்மை கல்வி அலுவலர் நிர்மலா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka