ஞாயிறு, 18 ஜனவரி, 2015

திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகையின் 3-ம் நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில், பொதுமக்கள் ஆட்டம், பாட்டு, விளையாட்டு என உற்சாக நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர். உறவினர்களுடனஅ கோயில், கடற்கரை போன்ற சுற்றுலா இடங்களுக்கு சென்ற மக்கள், தாங்கள் கொண்டு வந்த உணவுகளை பரிமாறி மகிழ்ந்தனர்.

கிராமப்புறங்களில் மட்டுமன்றி, நகர்ப்புறங்களிலும் கபடி, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம் மற்றும் ரேஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் கோயில், ஆற்றுப்படுகையில் மக்கள் கூடினாó. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவில் பிரகாரங்கள் நிரம்பி வழிந்தன. குழந்தைகள் கூடி விளையாடினர். தியாகராஜர் கோயிலுக்குள் சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில், காணும் பொங்கல் விழாவை மக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழந்தனர்.

நாகையில்: காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

நாகப்பட்டினம், புத்தூரில் நடைபெற்ற போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும், காணும் பொங்கலை முன்னிட்டு நாகப்பட்டினம் புதிய கடற்கரை, வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பேருந்து நிலையங்களில் அதிகமான கூட்டம் இருந்தது.

காரைக்கால்: காணும் பொங்கலையொட்டி, காரைக்கால் கடற்கரையில் திரளான மக்கள் திரண்டு பட்டம் விட்டு, பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

காணும் பொங்கல் நிகழ்ச்சியாக சனிக்கிழமை பகல் 11 மணி முதல் காரைக்கால் கடற்கரையில் திரளான மக்கள் குவியத் தொடங்கினர். கடலில் குளித்தும், கடற்கரையில் நின்று விளையாட்டுகளில் ஈடுபட்டும், சிறுவர்கள் பட்டம் விட்டும் குதூகலமாய் இருந்தனர்.

நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்ததால் கடற்கரையில் மக்கள் வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணியிலும், பாதுகாப்புடன் கடலில் குளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பணியிலும் காரைக்கால் மாவட்ட போலீஸார் தீவிரமாக பணியாற்றினர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை சாலை முழுவதும் மக்கள் கூட்டமாக இருந்தது. திருநள்ளாறு கோயிலில் தரிசனம் செய்ய வந்த வெளியூர் மக்கள் ஏராளமானோர், கடற்கரைக்கு வந்து பொழுதுபோக்கிச் சென்றதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka