புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
50 சதவீதம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக தீர்வுகாண வேண்டும் எனவும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில்...
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 350 பெண்கள் உள்பட 1,700 பேர், பணியாளர் சங்கத்தினர் 150 பெண்கள் உள்பட 950 பேர் என மொத்தம் 2,650 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் செüந்தர்ராஜன் தலைமை வகித்தார்.
இந்த போராட்டத்தால் திருவாரூர் மாவட்டத்தில் தாலுகா, ஊராட்சி மற்றும் வேளாண்துறைகளில் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக