திங்கள், 12 ஜனவரி, 2015

ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல்:தாய், மகன்கள் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி காவல் சரகம் நெடும்பலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகையன். இவர் எல்லைப் பாதுகாப்பு படை பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டுக்கு அருகே ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே தரைத்தளம் அமைத்து இருந்தனர். அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி முருகையன் மனைவி கண்ணகி, அவரது மகன்கள் முகிலன், தேவன் ஆகியோர் தரைத் தளத்தை இடித்து சேதப்படுத்தினார்களாம். இதை தட்டி கேட்ட ஊôராட்சித் தலைவர் விஜயாவை தரக்குறைவாக பேசி, அவருக்கு மூவரும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து, கண்ணகி உள்ளிட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka