பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் வரும் 22,23-ம் தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரசார இயக்கம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தது:
திருத்துறைப்பூண்டியில் அண்மையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் 21-வது மாநாட்டில் மாவட்டத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பல நடவடிக்கைளை எடுத்துள்ளதை கட்சி வரவேற்று, பாராட்டுகிறது.
மாநாட்டு தீர்மானங்களின்படி மீத்தேன் எடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், மதுவால் ஏற்படும் தீமைகளை விளக்கியும், காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை உரியவர்களுக்கு மீண்டும் வழங்கக் கோரியும் திருவாரூர் மாவட்டத்தில் பிரசார இயக்கம் வரும் 22,23 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக