மன்னார்குடி, ஜன. 20: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற தனியார் பேருந்து திருப்பத்தூர் என்ற இடத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்தில் ஏறிய அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் மகனும், மன்னார்குடியில் உள்ள தனியார் வங்கிக் காவலாளியுமான சத்தியசீலன் (22), செல்வராஜ் மகன் பிரதீப்ராஜன் (20) ஆகியோர் பேருந்து நடத்துநர் ரா. ஜீவானந்துடன் (24) தகராறில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கோட்டூர் போலீஸார் சத்தியசீலன், பிரதீப்ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கோட்டூர் போலீஸார் சத்தியசீலன், பிரதீப்ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக