வெள்ளி, 30 ஜனவரி, 2015

கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் காமராஜ், பாலசுந்தரம், மாவட்ட இணைச்செயலாளர்கள் மணி, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் மோகன் வரவேற்றார். மாநில செயலாளர் லீலாவதி, முன்னாள் மாநில துணைத்தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் உமாநாத், முன்னாள் மாவட்ட தலைவர் தியாகராஜன், அரசு ஊழியர் சங்க தலைவர் பைரவநாதன், அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற செயலாளர் சிவராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

சலுகைகள்

ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்போது தரம் உயர்த்தப்பட்ட 50 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு உடனடியாக கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து படிகளையும், தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும், உரிமைகளையும் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:20 என மாற்றி அமைக்க வேண்டும். மேல்நிலைகல்வியில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக பாட ஆசிரியர்களை நியமிப்பதுபோல், இடைநிலை கல்வியிலும் தனித்தனி பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பாரதிமோகன், மாவட்ட நிர்வாகிகள் கோபால், ஜெயந்தி, லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவாரூர் வட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka