திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு ஆட்சிய எம். மதிவாணன் தலைமை வகித்தார். மருத்துவ முகாமை தொடங்கி வைத்து மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:
ஏழை, எளிய மக்கள் உயரிய சிகிச்சை பெறவே முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு, நோயில்லா வாழ்வை பெற வேண்டும் என்றார் அமைச்சர்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் டி. மோகன்ராஜ், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநர் ஆர். சுமதி, மாவட்ட மருத்துவ கல்வியாளர் ராமச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் கே. உமாமகேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவர் வேதநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக