திருத்துறைப்பூண்டி,: திருத்துறைப்பூண்டி நகரத்தில் சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடாத நெடுஞ் சாலைத்துறையை கண்டித்து இன்று நடத்தியிருந்த முற்றுகை போரா ட்டம் கைவிடப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் சேதமடைந்துள்ள சாலை களை செப்பனிடாததை கண்டித்து திருத்துறைப் பூண்டி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி நெடுஞ் சாலைத்துறை அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டியிருந்தது. இதையடுத்து இது குறித்த பேச்சுவார்த்தை கூட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் மதியழகன் தலைமை வகித்தார்.இதில் கட்சியின் நகர செய லாளர் முருகேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞான மோகன், மாவட்டகுழு உறுப்பினர் சந்திரராமன், முத்துகுமரன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மற்றும் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறி யாளர் மணிபாலன் ஆகியோர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி நகர சாலைகளில் குண்டும் குழியுமாக உள்ள பள்ளங்களில் தற்காலிகமாக சில நாட்களில் மணல் மற்றும் உடைந்த கற்கள் கொண்டு சீர்ப்படுத்துவது, அண்ணா சிலையிலிருந்து பைபாஸ் சாலைவரை பேட்ஜ் ஒர்க் பணியை 19ம் தேதி துவக்குவது, பள்ளங்கோயில் முதல் திருத்துறைப்பூண்டி பைபாஸ் வரையிலான 6 கிலோமீட்டர் பணியையும் 19ம் தேதி துவங்குவது என்றும் உதவி செயற்பொறியாளரால் உறுதியளிக்கப்பட்டது. இதைனையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நகர செயலாளர் முருகேசன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக