திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சேகல்கோட்டகம் கிராமம் கீழத்தெருவை
சேர்ந்தவர் காசிநாதன் (வயது45). விவசாயி. இவர், நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது
நள்ளிரவில் அதே தெருவை சேர்ந்த ரமேஷ், சதீஷ் ஆகிய 2 பேரும்
காசிநாதன் வீட்டு முன்பாக நின்று கொண்டு கூச்சல் போட்டதாக கூறப்படுகிறது. இதை
காசிநாதன் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், காசிநாதனை
பிளேடால் கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் கிழித்து காயப்படுத்தி, கொலை
மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக காசிநாதன் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார்
செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்–இன்ஸ்பெக்டர்
அருள்பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை (35) கைது
செய்தனர். சதீசை தேடி வருகிறார்கள். காயம் அடைந்த காசிநாதன் திருத்துறைப்பூண்டி
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக