மண் பானை, அடுப்பு, சட்டி விற்பனை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு இல்லை என்று மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
பொங்கல் தமிழர்களின் முக்கிய விழாவாகும். இதில் மண் பாண்டங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக வயல்வெளிகளில் இருந்து மணல் கொண்டுவந்து குடும்பத்தினர் ஒருங்கிணைந்து மண் பாண்டங்களான அடுப்பு, பானை, சட்டி உள்ளிட்டவை தயார் செய்து, பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாகவே கடைத் தெருக்களில் வியாபாரத்தை தொடங்கிவிடுவர்.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தற்போது இல்லை. பொதுமக்கள் பொங்கல் வைப்பதற்கு எவர்சில்வர், பித்தளை, அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால், மண் பானை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அதனால் இத்தொழிலில் ஈடுபட்ட வந்த பெரும்பாலான தொழிலாளர்கள் தற்போது வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். மேலும் மழை காலம்தான் பொங்கல் பானை செய்வதற்குரிய காலமாக அமைவதால், இத்தொழில் நலிவடைவதற்கு மேலும் ஒரு காரணமாக அமைந்துவிட்டதென்று கூறப்படுகிறது.
காரைக்காலில் சுமார் 10 கிராமங்களில் மண்பாண்டத் தொழில் செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இருந்த நிலையில், தற்போது 2, 3 இடங்களில் மட்டுமே இத்தொழில் நடைபெறுகிறது. குலத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்ய முடியாதவர்களே இத்தொழிலை தொடர்ந்து செய்கின்றனர்.
காரைக்காலில் பொங்கலுக்காக வெகு குறைவான இடங்களிலேயே மண் பாண்டங்கள் விற்பனை மையம் இருந்தன. இவற்றிலும் மக்கள் வெகு குறைவானவர்களே வந்து பொருள்களை வாங்கினர். குலத்தொழிலாக இதை செய்வோருக்கு புதுச்சேரி அரசு தகுந்த ஆதரவை தந்தால் மட்டுமே, இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்கின்றனர் மண்பாண்ட தொழிலாளர்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக