திருவாரூரில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், வேளாண் இணை இயக்குனர் மயில்வாகணன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெரியகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் பேசியதாவது:-
கடந்த சில ஆண்டு முதல் தொடர்ந்து நிலவி வரும் வறட்சி மற்றும் வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2012-13-ம் ஆண்டு வறட்சி மாவட்டமாக அறிவித்து கூட்டுறவு கடன்களை மத்திய கால கடனாக மாற்றம் செய்யப்பட்டது. வட்டியில்லா கடனுக்கு 13 சதவீதம் மற்றும் அபராத வட்டி கணக்கிடப்பட்டுள்ளது. இதில் கடன் தொகை செலுத்தியவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.
முற்றுகை போராட்டம்
கும்பகோணம் மகாமகத்துக்காக தண்ணீர் தேவையென்றால் அந்த விழாவுக்காக மட்டும் தண்ணீர் திறக்கலாம். அதை தவிர்த்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதி வரை மேட்டூர் அணை நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்ற அறிவிப்பு தேவையற்றது என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் இருக்கை எதிரே தரையில் விவசாயிகள் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
உளுந்து விதை
கோதண்டராமன்:- நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் உளுந்து கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் பயன்பெற உளுந்து விதை இலவசமாக வழங்க வேண்டும். வாலைக்குளம் பகுதியிலுள்ள ஏரியை தூர்வாருவதுடன், ஏரி மண்ணை விவசாயிகள் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி:- கடந்த ஆண்டில் கொரடாச்சேரி பகுதியில் தண்ணீர் பிரச்சினையாலும், வலங்கைமானில் வயலில் தேங்கிய தண்ணீர் வடியாததாலும் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த பிரச்சினைக்கு காரணமான பாசன வாய்க்கால் இதுவரை தூர்வாரப்படவில்லை.
சேதுராமன்:- வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை ரத்து செய்வதுடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
சத்தியநாராயணன்:- கோடை சாகுபடிக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அறுவடை காலம் என்பதால் கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் நெல் உலர் எந்திரம் வாங்கி வைக்க வேண்டும். மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து நிலுவையிலுள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும்.
மருதப்பன்:- திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்.
இவ்வாறு விவாதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக