திருவாரூர் மாவட்டத்தில் சிறு தானியப் பயிர்களை ஊக்குவிக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலாநாயர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் அருகில் விஸ்வநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வயல் தின விழாவில் அவர் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் சிறு தானியப் பயிர் சாகுபடியை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிப் பணிக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அதனடிப்படையில், டெல்டா மாவட்டங்களில் சிறு தானியப் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் சிறுதானியங்களை மதிப்புக் கூட்டல் தொடர்பான திட்டம் கொரடாச்சேரி அருகே விஸ்வநாதபுரத்தில் செயல்படுத்த ரூ. 16.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
திட்டத்தில் குதிரைவாலி சிறு தானியத்தை உற்பத்தி செய்ய 20 பயனாளிகள் தேர்ந்தெடுத்து 20 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முதல் கட்டமாக 12 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
குதிரைவாலி வறட்சியைத் தாங்கி வளரும் பயிராகும். இதை உற்பத்தி செய்ய குறைந்த தண்ணீரே போதும் என்றாலும் தண்ணீர் தேங்கியிருந்தாலும் விளைச்சல் பாதிக்காது.
இத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்களை மதிப்புக் கூட்டுவதற்குத் தேவையான கருவிகளும் வழங்கப்பட்டு அவற்றை பிஸ்கட் மற்றும் இதர மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்ய இருப்பதால் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.
பெண்கள் விவசாயத்தில் முழுமையாக ஈடுபட வேண்டுமென்பதே திட்டத்தின் நோக்கம். சிறு தானியங்களை பள்ளி குழந்தைகள் உணவில் சேர்த்துக் கொண்டால் புத்திக் கூர்மைக்கு மிகவும் நல்லது என்றார் சாந்தா ஷீலா நாயர். விழாவில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக