திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.மேலும், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையில் ஆண்கள், பெண்களுக்குத் தலா இரு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் பிப். 20 ஆம் தேதி வரை கிராம விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், வாலிபால், கபடி போட்டிகளும், ஆண்களுக்கு கால்பந்து போட்டியும் நடத்தப்பட உள்ளன.
தனித்திறன் போட்டிகள் நடக்கும் நாள், நேரம் ஊராட்சித் தலைவரால் முன்பே அறிவிக்கப்படும். போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக