திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காவிரிப் படுகையை விட்டு, ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி, திருவாரூர் அருகேயுள்ள கிடாரங்கொண்டானில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 210 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓஎன்ஜிசி நிறுவனத்தை முற்றிலுமாக காவிரி டெல்டா மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் அருகேயுள்ள கிடாரங்கொண்டானில் செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அதே பகுதியிலுள்ள ஓஎன்ஜிசியை முற்றுகையிட பேரணியாகப் புறப்பட்டனர். அப்போது, போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து திருவிக அரசு கலைக் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலின்போது, காவிரி படுகையில் எண்ணெய், எரிவாயு எடுப்பது மற்றும் குழாய் அமைப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும், மீத்தேன் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியல் காரணமாக, திருவாரூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக