திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமிடத்தில் செவ்வாய்க்கிழமை ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார்.
நன்னிலம் அருகேயுள்ள சொரக்குடியில் பிப். 14 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்காக நடைபெற்று வரும் பணிகள் தொடர்புடைய அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு மேற்கொண்டு வேலையளிக்கும் நிறுவனங்களுக்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வருவது, மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை வசதி, போக்குவரத்து வசதி குறித்து ஆய்வு செய்து தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அரங்குகளைச் சுற்றி குப்பைத் தொட்டிகள், குடிநீர்த் தொட்டி அமைப்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டன.
ஆய்வின்போது, கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, நன்னிலம் வட்டாட்சியர் அம்பிகாபதி ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக