ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

திருவாரூர்,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெ யசந்திரன் பேசினார்.

குழந்தைகளை பாதுகாக்க
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைல்டுலைன் அமைப்பின் சார்பில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தலைமை தாங்கி பேசும்போது, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிர் விடுதிகள் உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதில் சைல்டுலைன் அமைப்பின் பேராசிரியர் அனில்குமார் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் மற்றும் நடவடிக்கைகள் பற்றி பேசினார்.

கூட்டத்தில் அரசு குழந்தைகள் நல டாக்டர் கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோசியாராஜன், குழந்தைகள் நலக்குழும தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட சைல்டுலைன் அமைப்பின் இயக்குனர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிதாஸ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka